Bigg boss season7: அர்ச்சனா டைட்டில் வின்னரா? யார் சொன்னது.. புது கதை சொன்ன ரவீந்திரன்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் விமர்சனம் செய்து வரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்திரன், அர்ச்சனா டைட்டில் வின்னர் இல்லை என்று குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சில மாற்றங்களுடன் ஒளிபரப்பானது. கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கி கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு போட்டியாளர்கள் இடையில் அளவுக்கு அதிகமாக வன்மமும், சண்டைகளும் நடைபெற்றன.

Ravindra chandra says Archana is not the winner bigg boss season 7

பிக் பாஸ் வீட்டில் இரண்டு குரூப்பாக செயல்படுவது, ஒரு போட்டியாளரை டார்கெட் செய்வது போன்ற சம்பவங்கள் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடந்தன. வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்தான் அதிகமாக ட்ரோல் செய்யப்படுவார்கள். ஆனால், இந்த முறை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். இதனால், கடுப்பான கமல் ஒரு கட்டத்தில், போட்டியாளர்களிடம் உங்க கேமுக்குள்ள என்னையும் ஒரு ஆளா கொண்டு வராதீங்க என்ற காட்டமாக கூறியிருந்தார்.

கிரெண்ட் பினாலே: இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிரெண்ட் பினாலே சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில், மாயா, வி.ஜே.அர்ச்சனா, தினேஷ் மற்றும் மணிச்சந்திரா, விஷ்ணு ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக உள்ளனர். இதில், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன் வெற்றியாளர் பட்டத்தை விஜே அர்ச்சனா வென்றுவிட்டார் என்றும், ரொக்கப் பரிசைப் பெற்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்று இணையத்தில் ஒரு செய்தி பரவி அனைவரும் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டைட்டில் யாருக்கு: இந்நிலையில், ரவீந்தர் சந்திரசேகரன் தனது யூடியூப் தளத்தில் விஜே அர்ச்சனா வெற்றியாளர் இல்லை என்று அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். அதில், பிக் பாஸ் வின்னர் யார் என்று இனிமேல் தான் தெரியவரும் என்றும், ஐந்தாவது இடத்தில் விஷ்ணு இருக்கிறார். இவர் எந்த ஆக்சன் பிளாக் படமாக இருந்தாலும் அதை காமெடி படமாக மாற்றிவிட்டார்கள் என்றார். மணி நான்காவது இடத்தில் இருக்கிறார். நடன இயக்குநரின் கதையாக இருந்தாலும், மக்கள் மனதை இந்த ஷோ முழுவதும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் மனதையும் கவர்ந்தார்.

குழப்பத்தில் ரசிகர்கள்: மூன்றாவது இடத்தில் அர்ச்சனா. இவருக்காக அம்மன் கோயில்களில் ஏகப்பட்ட அர்ச்சனை செய்யப்பட்டாலும் அவருக்கு மூன்றாவது இடமே. ஆரம்பத்தில் இருந்து விளையாட்டை விளையாடி மாயா, தினேஷ் முதல், இரண்டு இடங்களை பிடித்தனர் என்று கூறியுள்ளார். அர்ச்சனாவை ஊரே வாழ்த்தி வரும் நிலையில், ரவீந்திரன் இப்படி கூறியுள்ளதால், பிக் பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X