கலாய், கலாட்டா, கலகலப்பு.. ரெடி ஸ்டெடி போ சீசன் 2!

சென்னை: விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2.

இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களே.

ready steady po season 2 begins

ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ தான் இந்த ரெடி ஸ்டெடி போ சீசன் 2.

எல்லா எபிசோடிலும் இரு அணிகளாக கலந்துகொள்வார்கள். ஒரு அணிக்கு மூன்று பெண்கள் என இவர்களுக்கு விளையாட்டான டாஸ்குகள் தரப்படும். இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் என் டெர்டைனிங் சுற்றுகள் மற்றும்தான்.

ஆனால் இந்த வாரம் ஒரு வித்யாசமாக, இரண்டு அணிகளில் ஒரு அணியினர் ஆண் போட்டியாளர்களாக இருக்கப் போகிறார்கள். யார் இவர்கள் என்றால் நமது கலக்க போவது யாரு நட்சத்திரங்கள் தீனா, சதீஷ் மற்றும் பாலா.

ready steady po season 2 begins

மற்றொரு அணியில் பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களின் கலாய், கலாட்டா என கலகலப்பு நிறைந்ததாக இருக்கப்போகிறது இந்த வாரம் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி.

மொத்தம் நான்கு எக்சைட்டிங் சுற்றுகள் உள்ளன. மூன்றாவது சுற்றின் முடிவில் எந்த அணி அதிகமான சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ளார்களோ அவர்கள் நான்காவது சுற்றில் நமது தொகுப்பாளர்கள் அல்லது தோல்வியான எதிர் அணியுடன் விளையாடுவார்கள்

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்கள் எல்லாருக்கும் பிடித்த காம்போவான ரியோ மற்றும் ஆண்ட்ரூஸ் ஆவர்.

இவருடன் தொகுத்து வழங்கும் ஆண்ட்ரூஸ்- இரண்டாவது சீசனாக இவருடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார். இவர்களின் காம்போ சீசன் ஒன்னில் மிகப்பெரிய ஹிட் தற்பொழுது இரண்டாவது சீசனிலும் கலக்கி வருகின்றனர்

தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கின் உச்சகட்டமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை எல்லா ஞாயிற்றுக்கிழமையும் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X