டிவி ரியாலிட்டி ஷோக்களில் என்னதான் சொல்ல வர்றாங்க?

By Mayura Akilan

இப்பொழுதெல்லாம் எந்த டிவி சேனலை ஆன் செய்தாலும் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமில்லை. சனி, ஞாயிறுகளில் இரவு நேரங்களில் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களின் ஆதிக்கம்தான்.

சினிமாவில் ஆட முடியாத சின்னத்திரை நட்சத்திரங்கள் ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் ஆடி தங்களும் நடனம் ஆடத்தெரியும் என்று மக்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

சீரியலில் அழுது வடிந்து... வில்லத்தனம் செய்யும் நட்சத்திரங்கள் எல்லாம் ரியாலிட்டி ஷோக்களில் இணைந்து நடனமாடுவதைப் பார்த்தால் இல்லத்தரசிகளுக்குத்தான் ஆச்சரியம். ஆனால் ரியாலிட்டிஷோ என்ற பெயரில் கவர்ச்சி நடனங்களும், சில அபத்தமான நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன என்பதுதான் கொடுமை

விஜய் டிவி ஜோடி

விஜய் டிவி ஜோடி

சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து முதன் முதலாக ஜோடி என்ற நடன ரியாலிட்டி ஷோவை முதன் முதலாக ஆரம்பித்தது விஜய் டிவிதான் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக போன இந்த நிகழ்ச்சி இப்போது பல சீசன்களை கடந்துவிட்டது. இப்போதைய ஜோடியில் காமெடி என்ற பெயரில் முகம் சுளிக்கும் பல நடன நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்கின்றனர் ரசிகர்கள்.

கலைஞர் டிவி மானாட மயிலாட

கலைஞர் டிவி மானாட மயிலாட

கலைஞர் டிவி தொடங்கப்பட்ட போது விஜய் டிவியின் காப்பியாக தொடங்கப்பட்டதுதான் மானாட மயிலாட நடுவர்களாக குஷ்பு, ரம்பா, நமீதா போன்ற கவர்ச்சி நாயகிகள் பங்கேற்றனர். இதில் நடனமாடும் சின்னத்திரை ஜோடிகள் கவர்ச்சியின் உச்சத்திற்கே செல்கின்றனர் என்பது ரசிகர்களின் கருத்து.

சன் சூப்பர் குடும்பம்

சன் சூப்பர் குடும்பம்

சன் டிவியில் சமீபத்தில்தான் சின்னத்திரை நட்சத்திர குடும்பங்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் இந்த வாரம் முதல் தொடங்கியுள்ளது. நடனம் மட்டுமல்லாது, பாட்டு, காமெடி போன்றவை இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. நடனத்தின் போது கவர்ச்சி அதிகம் என்கின்றனர் ரசிகர்கள்.

நடுவர்களின் கமெண்ட்

நடுவர்களின் கமெண்ட்

இந்த நடனங்களை பார்த்துவிட்டு நடுவர்கள் போடும் மார்க், அதைவிட அவர்கள் கொடுக்கும் கமெண்ட்தான் சற்று ஓவர். நீங்க இன்னமும் கொஞ்சம் ஃபீல் பண்ணி ஆடியிருக்கலாம். உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சரியில்லையே... எக்ஸ்பிரசன் மிஸ்ஸிங் அடுத்த தடவை அதை கண்டிப்பா கொண்டுவாங்க என்றெல்லாம் சொல்லி பங்கேற்பாளர்களை உசுப்பேத்துவார்கள். பார்வையாளர்கள்தான் பாவம்.

என்னதான் சொல்ல வர்றாங்க சார்

என்னதான் சொல்ல வர்றாங்க சார்

இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் மூலம் என்னதான் சொல்ல வருகிறார்கள்? யார் சிறந்த ஜோடி என்று தேர்வு செய்து பரிசளிப்பதில் கூட நிறைய அரசியல் நிலவுகிறது என்று ஒரு சமயம் புகார் எழுந்தது. அதையும் மீறி பல சீசன்கள் தொடர்கிறதே எப்படி என்பதுதான் பொது ஜனங்களின் கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X