Raja Rani serial: ரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சுட்டாய்ங்கப்பா!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலை முடித்து வைத்து, ரீல் ஜோடியை ரியல் ஜோடியாகவும் சேர்த்து, சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து ராஜா ராணி சீரியலை முடித்து வைத்து விட்டது விஜய் டிவி.
விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஆல்யா மானஸா. இவருக்கு டான்ஸ் என்றால் கொள்ளை பிரியம். பின்னர் இவரை ராஜா ராணி சீரியலுக்கு சின்னத்திரை நடிகை என்று விஜய் டிவி அறிமுகம் செயதது.
ஆல்யா மானஸாவுக்கு ஜோடியாக ராஜா ராணி சீரியலில் நடித்தவர் குளிர் 100 படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமான சஞ்சீவ். ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது என்னவோ உண்மைதான்.

ராஜா ராணி
ஆல்யா மானஸா நல்ல டான்சர்.சென்னையின் மூன்று இடங்களில் இவர் டான்ஸ் பள்ளி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ராஜா ராணி சீரியலில் இவருக்கும் ஜோடியாக நடித்த சஞ்சீவ்க்கும் கெமிஸ்ட்ரி ஏகத்துக்கும் எகிறி, மான்ஸாவின் காதலுக்கு உலை வைத்தது. ஏற்கனவே மானஸா ஒருவரை காதலித்துக் கொண்டு இருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரியால் நடுவில் மானஸாவின் காதல் பிரேக் அப் ஆனது. பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ட்வீட்டரில் செல்ஃபி போட்டு ,உறவைப் புதுப்பித்தார்கள்.

காதல் கை நழுவி
மீண்டும் காதலர்கள் இருவருக்குள்ளும் ஆன காதல் கை நழுவி, எண்ட் கார்டு போடப்பட்டது. அதற்குள் மானஸா சஞ்சீவுடன் காதலில் மாட்டிக்கொண்டார். இருக்கா, இல்லையான்னு கொஞ்ச நாட்கள் போன நிலையில், இருக்கு என்று உறுதி படுத்தினார்கள் மான்ஸாவும், சஞ்சீவும். இப்படியே சிறிது காலம் சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தவர்கள்,அடுத்து ஊரறிய நிச்சயதார்த்தம் செய்தும் கொண்டார்கள்.

உடனே நடிக்க
நிச்சயதார்த்தம் ஆன கையோடு, இருவரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார்கள். இதில்தான் ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போனது. சீரியலும் டல்லடித்து, ரேட்டிங் குறைந்துகொண்டே வந்தது. ரசிகர்களின் மனோபாவமே தான் ரசிக்கும் நடிகை யாருக்கும் சொந்தமானவளாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அவர்களால் அந்த பெண்ணை ரசிக்க முடியாது என்கிற நல்ல எண்ணம்தான் அதுக்கு காரணம்.

ரீல்ஜோடியை ரியல்ஜோடியாக்கி
சின்னய்யா செம்பா என்கிற ரீல் ஜோடியை ஆல்யா மானஸா, சஞ்சீவ் என்கிற ரியல் ஜோடியாக்கி புண்ணியம் கட்டிக்கொண்ட விஜய் டிவி, ராஜா ராணி சீரியலை மேலும் ஜவ்வு மாதிரி இழுத்தால் தாங்காதுன்னு உண்மை நிலை அறிந்து சீரியலை முடித்து வைத்துள்ளார்கள். இருந்தாலும், நம்புங்கள் ரசிகர்களே மீண்டும் இந்த ஜோடி விஜய் டிவியின் வழக்கப்படி, திரும்பி எதாவது சீரியலில் நடிக்க வருவார்கள்.
ராஜா ராணி சீரியலுக்குப் பிறகு அந்த நேரத்தில் ஆயுத எழுத்து என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











