Kizhakku vaasal: ரியல் ஜோடி குறித்து பகிர்ந்த கிழக்குவாசல் ரீல் ஜோடி.. அட இதெல்லாம் நடந்துருக்கா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் விரைவில் கிழக்குவாசல் சீரியலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பியிலும் இந்தத் தொடர் புள்ளிகளில் முன்னேற்றம் காட்டியுள்ளது.

Reel pair of Kizhakku vaasal serial shares their Real pairs

இந்தத் தொடரில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏசி முன்னணி கேரக்டரி நடித்து வருவது இந்தத் தொடரின் சிறப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு வாசல் தொடர்: விஜய் டிவியின் சீரியல்களின் 48வது டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இதில் கிழக்கு வாசல் தொடரும் சிறப்பான புள்ளிகளை பெற்று முன்னேற்றம் காட்டி வருகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் தனது ஒளிபரப்பை துவங்கியுள்ள இந்தத் தொடர் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏசி முன்னணி கேரக்டரில் நடித்துவருவது இந்தத் தொடரின் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இயக்குநர் எஸ்ஏசி: கிழக்குவாசல் தொடரில் எஸ்ஏசியுடன் ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், அஸ்வினி, ஆனந்த்பாபு உள்ளிட்டவர்கள் நடித்து வந்தனர். இதில் அர்ஜூன் என்ற கேரக்டரில் தினேஷ் நடித்துவந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ளதால் அவரின் கேரக்டரில் தற்போது மற்றொரு நடிகர் இணைந்துள்ளார். சாமியப்பன் என்ற கேரக்டரில் எஸ்ஏ சந்திரசேகர் இந்த சீரியலின் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

வளர்ப்பு மகள் ரேணுகா: தன்னுடைய மகளுக்கு தன்னுடைய வீட்டை அடகுவைத்து திருமண ஏற்பாடுகளை சாமியப்பன் நடத்த, தயாளன் அவரை ஏமாற்றி வீட்டை கடனுக்காக எழுதி வாங்குவதுடன் திருமணத்தையும் நிறுத்துகிறார். இதனால் சாமியப்பன் வீட்டில் அவரது மகன், மருமகள் ஆகியோரால் குழப்பம் ஏற்படுகிறது. இருந்த போதிலும் தன்னுடைய வளர்ப்பு மகளான ரேணுகாவை மிகப்பெரிய படிப்பை படிக்க வைக்க போராடுகிறார் சாமியப்பன். இதனால் தன்னுடைய மகனின் ஏச்சுக்களை அவர் சந்திக்க வேண்டி வருகிறது.

ரேணுகாவை காதலிக்கும் ஷண்முகம்: ஆயினும் அதையெல்லாம் சமாளித்து வயதான காலத்திலும் கடினமாக உழைக்கிறார். தன்னுடைய வீட்டை தான் மீட்பேன் என்று உறுதி ஏற்கிறார். மேலும் தன்னுடைய மகளின் படிப்பையும் சிறப்பாக மேற்கொள்ள செய்வேன் என்றும் உறுதி ஏற்கிறார். இந்நிலையில் ரேணுகவை ஒருதலையாக காதலிக்கிறார் ஹீரோ ஷண்முகம். தன்னுடைய காதலை ரேணுகாவிடம் கூற முடியாமல் தவிக்கிறார். அவருடைய காதல் ரேணுகாவிற்கு எப்பொழுது தெரியும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரியல் ஜோடி குறித்த பகிர்வு: இந்நிலையில் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களிடையே பேசிய இந்த ரீல் ஜோடி, தங்களது ரியல் ஜோடிகள் குறித்த தங்களது உற்சாக அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதலில் பேசிய ரேணுகா, தன்னுடைய கணவர், தன்னுடைய திருமணம் நடைபெற்ற இடத்தில் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு கேண்டில் டின்னர் பார்ட்டி வைத்து திருமண நாளை நியாபகப்படுத்தி தன்னுடைய கணவர் தன்னை நெகிழச் செய்ததை நினைவு கூர்ந்துள்ளார். இதை வெங்கட்டும் கலாய்த்துள்ளார்.

வெங்கட் நெகிழ்ச்சி: இதேபோல போல தன்னுடைய புகைப்படத்தை விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்ததே தன்னுடைய மனைவிதான் என்றும் தன்னுடைய நடிப்பு கேரியரை துவக்கி வைத்து தன்னை சிறப்பான துறையில் பங்கேற்க வைத்ததும் அவர்தான் என்றும் தன்னுடைய நெகிழ்ச்சியை கூறியுள்ளார் ஷண்முகம் கேரக்டரில் நடித்துள்ள வெங்கட். கடந்த 16 ஆண்டுகளாக தான் மீடியாவில் உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X