சின்னத்திரை ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி!
சினிமாவில் சில படங்களில் இணைந்து நடித்தாலே அது ஹிட் ஜோடி ஆகிவிடும். ரசிகர்களுக்கு எந்த ஜோடி நடித்தால் பிடிக்குமோ அந்த ஜோடிகளையே இயக்குநர்களும் புக் செய்வார்கள்.
இதேபோல சின்னத்திரையில் இணைந்து நடித்த ஜோடிகளுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி ஹிட் அடிப்பது உண்டு. அந்த ரீல் ஜோடிகள் நாளடைவில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுவதும் உண்டு.
இதுபோன்ற பிரபல சின்னத்திரை ஜோடிகள் சிலரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஸ்ரீலேகா ராஜேந்திரன்
தூர்தர்ஷன் காலத்தில் இருந்து சின்னத்திரையில் நடித்து வரும் ஜோடி ராஜேந்திரன் - ஸ்ரீலேகா தம்பதியர். ரீல் ஜோடியாக மட்டுமல்ல ரியலிலும் வெற்றிகரமான ஜோடி என்று பெயரெடுத்திருக்கின்றனர். இன்றைக்கும் சேனல்களில் இவர்களின் அமர்களமான நடிப்பைக் காணலாம்.

தேவதர்சினி - சேத்தன்
மர்மதேசத்தில் அறிமுகமான தேவதர்ஷினி - சேத்தன் ஜோடி இன்றைக்கும் சின்னத்திரையில் பிரபல ஜோடியாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. சீரியல் மட்டுமல்ல, வீட்டுமனை, ராசிக்கல் விளம்பரத்திலும் இந்த ஜோடிக்குத்தான் வரவேற்பு அதிகமாம்

ராஜ்கமல் – லதாராவ்
மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமான லதா ராவ் நடிகர் ராஜ்கமலுடன் இணைந்து ஒரு சீரியலில் நடித்தார். அப்போது இணைந்த இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக ஆனது சுவாரஸ்யம். இரண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்ட இந்த ஜோடி இப்போது பிரபல தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.

ப்ரீத்தா – ராகவ்
ராகவ் சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவிலும் நடித்துள்ளார். ப்ரித்தாவும் சின்னத்திரையைப் போல சினிமாவில் தலை காட்டியிருக்கிறார். இந்த ஜோடி ரியல் ஜோடியாக ஆனதோடு நன்றாக நடனமாடத் தெரிந்த ஜோடி என்றும் பெயரெடுத்தவர்கள்.

சஞ்சீவ்-ப்ரித்தி
திருமதி செல்வம் ஹீரோ சஞ்சீவ், மானாட மயிலாட நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கிவருகிறார். சித்தி தொடங்கி பந்தம் வரை நடித்தவர் ப்ரீத்தி. இந்த ஜோடி 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. சஞ்சீவ் சீரியலில் தொடர்ந்தாலும், குழந்தை குடும்பம் என்று செட்டில் ஆனா ப்ரீத்தி இப்போது பொம்மலாட்டம் சீரியலில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

கணேஷ்கர் – ஆர்த்தி
குழந்தை நட்சத்திரம் தொடங்கி சன் டிவியில் டாப் டென் வரை ஜோடியாக தொகுத்து வழங்கிய இந்த ஆர்த்தி கணேஷ்கர் ஜோடி கடந்த 2011 ம் ஆண்டு ரியல்ஜோடியாக ஆனது. திருமணத்திற்குப் பின்னரும் இந்த ஜோடி கூட்டணி அமைத்து சிரிப்பொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர் அவர்களைப் பற்றி அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











