டிவி சீரியல் செட்டில் நாய்க்கடியால் காயம்: தயாரிப்பாளர்கள் மீது நடிகை கோபம்

By Siva

மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரீனா அகர்வால் கியா ஹால் மிஸ்டர் பாஞ்சால் தயாரிப்பாளர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

கியா ஹால் மிஸ்டர் பாஞ்சால் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ரீனா அகர்வால். கடந்த ஏப்ரல் மாதம் செட்டில் இருந்த அவரை நாய் கடித்துவிட்டது.

இதில் முகத்தில் காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது,

 நாய்க்கடி

நாய்க்கடி

கியா ஹால் செட்டில் இருந்தபோது என்னை நாய் கடித்தது அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஏப்ரல் மாதம் நடந்த சம்பவத்திற்கு தயாரிப்பாளர்கள் தற்போது வரை எனக்கு இழுப்பீடு தரவில்லை. நான் 4 மாதங்கள் சிகிச்சை பெற்றேன். அவர்கள் அந்த சிகிச்சைக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை பணம் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

பணம்

பணம்

சிகிச்சைக்கான பணத்தை கொடுக்குமாறு நான் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன். ரூ. 95 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை தான் தருவோம் என்று நேற்று தெரிவித்தனர். தங்களின் புதிய லேடீஸ் ஸ்பெஷல் ஷோவில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக கூறியுள்ளனர். கியா ஹால் தொடரில் நான் நடித்தபோது சில காட்சிகளில் நான் நன்றாக நடிக்கவில்லை என்றார்கள். சரியாக நடிக்காதவளுக்கு எதற்காக புதிய வாய்ப்பு அளிக்கிறார்கள்? எல்லாம் இழுத்தடிக்கத் தான்.

குழப்பம்

குழப்பம்

அந்த ரூ. 1 லட்சம் இழப்பீட்டையும் கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். என்னை நாய் கடித்தவுடன் நான் முன்பே தொடரில் இருந்து வெளியேற நினைத்ததாக மீடியாக்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இரண்டையும் ஏன் குழப்ப வேண்டும். எனக்கு சில டிராக் பிடிக்காமல் இருந்தது. ஆனால் அதற்கும் நான் தொடரில் இருந்து வெளியேறியதற்கும் தொடர்பு இல்லை.

 தழும்பு

தழும்பு

நாய் கடித்த பிறகு நடிக்க முடியாததால் தொடரில் இருந்து வெளியேறினேன். நாய் கடிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே நான் சரியாக நடிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடித்ததால் தழும்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் நான் நடிக்க வந்தால் கேமராவில் தெரியும். லேசர் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொறுமையை இழந்து தான் மீடியாவிடம் இது குறித்து பேச வந்தேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X