"அதோ போறா பாரு, காயத்ரி சண்டாளி".. எனக்குப் பிடிச்சிருக்கு.. சிலாகிக்கும் ரேகா குமார்!
டிவி சீரியலைப் போல தமிழ் சினிமாவிலும் பவர்ஃபுல் வில்லியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் நடிகை ரேகா குமார்.
தமிழ், மலையாளம்,கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் வில்லியாக நடித்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கும் நடிகை ரேகாவிற்கு இது தனது நடிப்பிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்.
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த ரேகா குமார், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார். சினிமாவிலும் சிறந்த வில்லி என்ற பெயரெடுக்க வேண்டும் என்பது ரேகா குமாரின் ஆசையாம்.

தெய்வமகள் காயத்ரி
கன்னட சீரியல்களில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் ரேகா குமார். தெய்வமகள் தொடரில் காயத்ரி என்ற வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணியாக நடிக்கும் காயத்ரி இந்த தொடரின் வில்லாதி வில்லி.

வில்லிதான் இஷ்டம்
எனக்கு வில்லியாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வில்லியாகத்தான் நடிப்பேன்" என்கிறார் ரேகா குமார்.

கன்னட சீரியல்கள்
நான் நடிகையாக அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். 75 படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு கன்னட சீரியல்களில் நடித்தேன்.

மூன்று மொழிகளிலும் வில்லி
இதைப்பார்த்துவிட்டு மலையாள சீரியல்களில் வாய்ப்பு வந்தது. அதை பார்த்து தெய்வமகள் சீரியல் வந்தது. மூன்று மொழிகளிலும் வில்லி கேரக்டர் என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறார்கள்.

பறந்து பறந்து நடிக்கிறேன்
பெங்களூர் சொந்த ஊர். மூன்று மொழிகளில் நடிப்பதால் திருவனந்தபுரம், சென்னை, பெங்களூருக்கு பறந்துகொண்டே இருக்கிறேன்.

சினிமாவிலும் வில்லை
தற்போது தமிழில் ராஜா ராஜேந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் பவர்புல் வில்லியாக புகழ்பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளது.

திட்டுவதுதான் ஆசிர்வாதம்
வாழ்க்கையில் பாசிட்டிவாக இருக்கும்போது சீரியலில் நெகட்டிவாக நடிக்கத்தான் பிடிச்சிருக்கு. வெளியில்போகும் அதோ போறா பாரு அவள் தான் காயத்ரி சண்டாளி என்று பெண்கள் திட்டுகிறார்கள். அது என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்கிறார் ரேகாகுமார்.


Click it and Unblock the Notifications











