கவின் மேல காதல் வந்துச்சா.. இந்த உலகத்தை பத்தி எனக்கு கவலையில்லை.. குழப்பத்தை தீர்த்த லாஸ்லியா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 60 : காதலை வெளிப்படையாக சொன்ன Losliya

சென்னை: கவினுடனான உறவு குறித்தும் அந்த உறவுக்கான காரணம் குறித்தும் லாஸ்லியா பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கவினுடன் நெருங்கி பழகி வருகிறார். கவினுடன் தான் கொண்டிருப்பது வெறும் நட்புதான் என்று இதுவரை கூறி வந்தார் லாஸ்லியா.

கவின் ஏற்கனவே தனது சுயநலத்துக்காக அங்குள்ள பெண்களின் உணர்வுகளோடு விளையாடினார். இதனால் அவர் மீது செம கடுப்பில் உள்ளனர் பார்வையாளர்கள்.

துண்டிக்கும் லாஸ்லியா

துண்டிக்கும் லாஸ்லியா

இந்நிலையில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த லாஸ்லியா கவின் பின்னால் சுற்றி தனது பெயரை கெடுத்துக் கொண்டார். கவினை யாராவது நாமினேட் செய்துவிட்டால் அவர்களுடனான உறவை துண்டித்துக் கொள்கிறார் லாஸ்லியா.

மரியாதை குறையும்

மரியாதை குறையும்

மேலும் கவின் மட்டும்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போலவும், அவர் மட்டும்தான் நல்லவர் என்பது போலவும் பேசி வருகிறார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியா மீதான மரியாதை மக்களிடையே குறைந்து வருகிறது.

சேரனின் கேள்வி

சேரனின் கேள்வி

முழுமையாக கவினிடம் சரணடைந்துவிட்ட லாஸ்லியா, தனது சேரனப்பாவை விடவும் கவின்தான் முக்கியம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சேரன் முன்பை விடவும் தற்போது கவினுடன் மிகவும் க்ளோஸாக இருப்பது குறித்து லாஸ்லியாவிடம் கேட்டார்.

கவினுக்கும் உண்மையாக பிடித்துள்ளது

கவினுக்கும் உண்மையாக பிடித்துள்ளது

அதற்கு பதிலளித்த லாஸ்லியா, தப்போ சரியோ நிறைய விஷயங்களில் கவின் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறான். முன்பை விட இப்போது எனக்கு கவினை ரொம்பவும் பிடித்துள்ளது. கவினுக்கும் என்னை உண்மையாக பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்.

வெளியே போய்தான் அடுத்தக்கட்டம்

வெளியே போய்தான் அடுத்தக்கட்டம்

இந்த உலகம் என்ன சொல்கிறது என்பது பற்றி உனக்கு கவலையில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. எனக்கு கவின் ஆதரவாய் இருப்பதால் நானும் அவனுக்கு ஆதரவாய் இருக்கிறேன். அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோவது வெளியே போய்தான் என்று தெளிவாக பேசுகிறார் லாஸ்லியா.

காதலாக மாறும்

காதலாக மாறும்

ஆக கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் இருப்பது காதல் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அந்த காதல் பிக்பாஸ் வீட்டிற்குள் வேண்டாம் என வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளவில்லை என்பதும் வெளியில் போய் நிச்சயம் இது காதலாக மாறும் என்பதும் லாஸ்லியாவின் பதிலில் இருந்து தெளிவாகியிருக்கிறது.

கதைக்க மட்டுமல்ல காதலிக்கவும்

கதைக்க மட்டுமல்ல காதலிக்கவும்

கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் இருப்பது நட்பா காதலா என்ற கேள்விக்கு லாஸ்லியா பதில் தெரிவித்துவிட்டார். இதுவரை கவினை பிடிக்கும், கவினுடன் கதைக்க பிடிக்கும் அவனுடன் இருந்தது நட்புதான் என பேசி மொழுகி வந்த லாஸ்லியா இது காதலாக வெளியே போய் மாறும் என தெரிவித்து குழப்பத்தை தீர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X