குடியரசு தினத்திற்கு டிவி சேனல்களில் விஸ்வரூபம்…
குடியரசு தினத்தை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, பாலிமர் டிவி, என தமிழ் சேனல்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். அனைத்து பிரபல சேனல்களிலும் விஸ்வரூபம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
சன்டிவியில் சிறப்புத்திரைப்படங்களாக காலை நேரத்தில் அந்நியன் திரைப்படமும் மாலையில் முகமூடி திரைப்படமும் ஒளிபரப்புகின்றனர். விஜய் டிவியில் தாண்டவம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியின் பிரசித்தி பெற்ற கேம் ஷோக்களான 'அது இது எது' காலை 11 மணிக்கும், 'ஹோம் ஸ்வீட் ஹோம்' காலை 12 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சினேகா பிரசன்னா திருமண நிகழ்ச்சி
பிரபல திரைப்பட ஜோடிகளாக சினேகா, பிரசன்னா திருமண நிகழ்ச்சி சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு மறுஒளிபரப்பு செய்கின்றனர். வரவேற்பு முதல் ரிசப்சன் வரை கலர்புல் கொண்டாட்டமாக இருக்கும் நிகழ்ச்சி அது.

பாரதிராஜாவுடன் ஒரு சந்திப்பு’
விஜய் டிவியில் ஜனவரி 26குடியரசு தினத்தன்று மாலை 4.00 மணிக்கு ‘பாரதிராஜாவுடன் ஒரு சந்திப்பு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் தனது ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்' திரைப்படம் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

விஸ்வரூபம் ஒரு சிறப்பு பார்வை
மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் ஒரு சிறப்புப் பார்வை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த திரைப்படம் நடிகர் கமல், அவருடன் திரைப்படத்தில் பங்கேற்ற நட்சத்திரங்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜீ தமிழில் மேக்கிங் ஆப் விஸ்வரூபம்
விஸ்வரூபம் திரைப்படத்தின் சிக்கல் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவதைப் போல சேனல்களில் அந்த திரைப்படம் பற்றி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஜீ தமிழ் சேனலில் குடியரசு தினத்தன்று இரசு 8 மணிக்கு மேங்கிங் ஆப் விஸ்வரூபம் ஒளிபரப்பாகிறது.

பாலிமர் டிவியில் கமலுடன் சந்திப்பு
பாலிமர் தொலைக்காட்சியில் நடிகர் கமலுடன் ஒரு சிறப்பு பேட்டி ஒளிபரப்பாகிறது. இதில் விஸ்வரூபம் திரைப்படம் பற்றியும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார் கமல்ஹாசன்.

கடல் ஒரு சிறப்பு பார்வை
விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு மணிரத்னம் தனது கடல் திரைப்படம் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். இந்த சிறப்பு பேட்டியில் கடல் நாயகன் கவுதம் கார்த்திக், துளசி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சன்டிவியில் அந்நியன் முகமூடி
குடியரசு தின சிறப்புத் திரைப்படமாக காலையில் விக்ரம், சதா நடித்த அந்நியன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மாலை 6 மணிக்கு ஜீவா, நரேன் நடித்த முகமூடி திரைப்படம் ஒளிபரப்புகின்றனர்.
விஜய் டிவியில் விக்ரம்,அனுஷ்கா நடித்த தாண்டவம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இரவு 11 மணி பாலிவுட் திரைப்படம் ‘தி க்ரானிக்ஸ் ஆப் நார்னியா' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











