மொத்தமா விபூதி அடிச்சுப்புட்டாரு பிக்பாஸ்.. இந்தவாரமும் சாக்ஷி எஸ்கேப்பாம்.. எவிக்ட்டானது அவங்களாம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
பிக்பாஸில் பங்கேற்றுள்ள சாக்ஷி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அடுத்தவரை போட்டுக்கொடுத்தும், சில விஷயங்களை திரித்துக் கூறுவதையுமே தொழிலாக கொண்டுள்ளார். முதுகில் குத்துவதிலும் பின்னால் பேசுவதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார் சாக்ஷி.
இதனால் அவரை பாய்சன் என்றே அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக மீரா மிதுன் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை வெறுப்படைய செய்துவிட்டது.

நெருங்கிய தோழிக்கு துரோகம்
ரேஷ்மாவுடன் க்ளோஸாக இருந்தபோதும் அவர் குறித்து பின்னால் பேசி வந்தார் சாக்ஷி. தனது நெருங்கிய தோழியான அபிராமி, கவினை காதலிப்பது தெரிந்த பிறகும் கவினை காதலித்தார்.

லாஸ்லியா ரூபத்தில் பூமராங்
ஆனால் அந்த காதல் நினைத்தது போல் இல்லை. கர்மா லாஸ்லியா ரூபத்தில் வந்து பூமராங் ஆட்டம் காட்டியது. இதனால் காதல் தோல்வியில் காயம்பட்டுள்ளார் சாக்ஷி,

எப்போது நாமினேஷனுக்கு வருவார்?
சாக்ஷிதான் பிக்பாஸ் வீட்டின் பல பிரச்சனைகளுக்கும் காரணம் என பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் எப்போது சாக்ஷி நாமினேஷனுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்தனர் பார்வையாளர்கள்.

வெளியேறிய மீரா
கடந்த வாரமே நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சாக்ஷி வெளியேற்றப்பட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் தனது அவசர புத்தியால் சேரன் மீது தவறான குற்றச்சாட்டைக் கூறி சாக்ஷிக்கு விரிக்கப்பட்ட வலையில் வான்டட்டாக விழுந்து வெளியேறினார் மீரா மிதுன்.

முக்கோண காதலால் பரிதாபம்
இதனால் கடந்த வாரம் தப்பித்தார் சாக்ஷி. சரி இந்த வாரம் லிஸ்ட்டில் இருக்கிறார் வெளியேற்றிவிடலாம் என காத்திருந்தனர் பார்வையாளர்கள். ஆனால் கவினின் முக்கோண காதலால் சாக்ஷி மீது மக்களுக்கு கொஞ்சம் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது.

இந்த வாரம் நியூட்ரல்?
இதனாலோ என்னவோ இந்த வாரமும் சாக்ஷி காப்பாற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் சாக்ஷி காப்பாற்றப்பட்டு எதிர்பாரதவிதமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீ தான்டா ஃபூலு
ரேஷ்மா தன்னை நியூட்ரல் என கூறுவாரே தவிர ஒருபோதும் அவர் நியூட்ரலாக இருந்ததே இல்லை. முழுக்க முழுக்க ஜால்ரா தான். அதோடு கடந்த வாரம் சேரனை இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு, இந்த ஏரியாவுல நீ தான்டா ஃபூலு என்று கூறினார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முகென் காலி
இதன் வெளிப்பாடுதான் ரேஷ்மா எவிக்ஷனுக்கு காரணமா அல்லது கன்டென்ட் கொடுக்காததா என்பது பிக்பாஸ்க்கு தான் வெளிச்சம். எது எப்படியோ இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வீட்டை விட்டு கிளம்பும் போது முகெனை சாமியாடிவிட்டுதான் செல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொறுத்திருப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாளை இரவு வரை!


Click it and Unblock the Notifications











