எல்லாருமே ஏங்குறது அதுக்காகதான்.. முகெனை அழ வைத்த ரேஷ்மா! கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள ரேஷ்மா, முகென் குறித்து பேசியது கலங்க செய்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 99வது நாளை எட்டியுள்ளது. பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்கள் வெளியேற்றப்பட்டு, பைனலிஸ்ட்டுகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்நிலையில் இந்த சீசன் தொடங்கிய போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஹவுஸ்மேட்ஸ்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, மீரா மிதுன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் அவர்கள் அனைவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசுவது காண்பிக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் ஏங்குவது
அப்போது எல்லோருக்கும் முன்பு கலங்கியபடியே பேசுகிறார் ரேஷ்மா. அதாவது நாம் எல்லோரும் ஏங்குவது அன்புக்காகதான். நானா இருக்கட்டும் முகெனா இருக்கட்டும். நீ மட்டும் தனியா இல்லை முகென். உண்மையில் எல்லாருமே அப்படிதான் வந்தோம். நான் உண்மையிலேயே இந்த பையன நேசிக்கிறேன்.

நீ நீயாவே இரு
இந்த ஜென்மத்துல நீ அனாதைக் கிடையாது, உனக்கு அன்பில்லாம உலகமே கிடையாது. நீ வெளியில வந்தாதான் தெரியும் உனக்கு எவ்ளோ அன்பு இருக்குன்னு. நீ நீயாவே இரு.. நேர்மையா இரு என்று கூறுகிறார்.

என் பையன்
இதனைக் கேட்டு கலங்கிய முகென் ரேஷ்மாவை கட்டிபிடித்து நன்றி கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனேயே என் பையனுக்கு சாப்பாடு கொடுக்கறதில்லையா என உரிமையோடு கேட்டு அன்பை வெளிப்படுத்தினார் ரேஷ்மா.

முகென் டீச்சர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை முகென், அன்பு ஒன்றுதான் அனாதை என்று கூறியிருக்கிறார். மேலும் தான் அன்புக்காக ஏங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலராக கலந்துகொண்டு பேசிய முகெனின் டீச்சரும் அவர் அன்புக்காக ஏங்கியதை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











