5 வருஷ திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?.. சின்னத்திரை நடிகை ரேஷ்மா முரளிதரன் கணவரை பிரிந்தாரா?

சென்னை: பூவே பூச்சூடவா, செல்லமே செல்லம் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த ரேஷ்மா முரளிதரன் தனது கணவரும் சீரியல் நடிகருமான மதன் பாண்டியனை விவாகரத்து செய்யப்போவதாகவும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே திருமணமாகி 5 ஆண்டுகளாக தங்களுக்கு குழந்தை இல்லை என்றும் எங்கே சென்றாலும், அதைப்பற்றியே பலரும் கேட்டு டார்ச்சர் பண்றாங்க என சில மாதங்களுக்கு முன்னதாக ரேஷ்மா முரளிதரன் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Reshma Muralidharan and Madhan Pandian plans to divorce after 5 years of Marriage

திருமணமான சில நடிகைகளுக்கு குழந்தைபேறு இல்லை என்பதற்காக விவாகரத்து நடந்த பஞ்சாயத்துகள் பல அரங்கேறிய நிலையில், அதில், ரேஷ்மாவும் சிக்கிக் கொண்டாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மதன் பாண்டியன் உடன் திருமணம்: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் தான் ரேஷ்மா முரளிதரன். தற்போது இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமே செல்லமே சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் மதன் பாண்டியனுக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிலர் என்னை கேட்கும் கேள்வி என்னை காயப்படுத்துவதாக கூறியுள்ளார்.

யாரு இந்த ரேஷ்மா முரளிதரன்?: கேரளாவை சேர்ந்த ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே' பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் இவருக்கு எக்கசக்க ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. அந்த சீரியலைத் தொடர்ந்து, கலர்ஸ் தமிழில் சேனலில், 'அபி டெய்லர்' என்ற சீரியலில் நடித்தார். பூவே பூச்சூடவா சீரியலில் தன்னுடன் நடித்த நடிகரும், தொகுப்பாளருமான மதன் பாண்டியனை காதலித்த நிலையில் 2021ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதுதான் காரணமா?: திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா, விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது. தற்போது ரேஷ்மா சன் தொலைக்காட்சியில் செல்லமே செல்லமே என்கிற சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் சீரியலில் நடிக்கச் செல்லும் இடங்களிலேயே கர்ப்பமாகும் எண்ணம் உள்ளதா? என்றுக் கேட்டே வாய்ப்புத் தருவது ரொம்பவே மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லையா? என்றும் கேட்பதாகவும் புலம்பியிருந்தார்.

இந்நிலையில், மதன் பாண்டியனை பிரியப் போகிறார் என்றும் இருவரும் சமீப காலமாக பேசிக் கொள்வதோ சேர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவுகளை போடுவதோ கிடையாது என்கின்றனர். ஆனால், இது தொடர்பாக இன்னமும் ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் என யாரும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X