இன்னுமா சேரன் மேல உங்களுக்கு கோபம் குறையல?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரனை பெயரை இன்றும் நாமினேட் செய்துள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாட்டாமை டாஸ்க்கின் போது சேரன் ரேஷ்மாவிடம் கத்தினார். காரணம் அது அவருக்கான கேரக்டர்.
அதனை புரிந்துகொள்ளாத ரேஷ்மா, சேரனை ஒரு இயக்குநர், வயதில் மூத்தவர் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு, இந்த ஏரியாவுலேயே நீ தான்டா லூசு என்றார்.

என்னை ஏன் கத்தினீர்கள்
இதனால் ஷாக்கான சேரன், ஏன் அப்படி கேட்டாய் என்றார். அதற்கு டாஸ்க் என்று கூறிய ரேஷ்மா, நீங்கள் என்னை ஏன் கத்தினீர்கள் என்று கேட்டார்.

அழ வைக்கிறீர்கள்
அது டாஸ்க் என்று கூறினார் சேரன். நான் சொன்னதும் டாஸ்க்தான் என்றார் ரேஷ்மா. பின்னர் பிறந்த நாளும் அதுவுமாய் என்னை அழ வைக்கிறீர்கள் என்றார்.

மன்னிப்பு கேட்ட சேரன்
இதனால் மனமுடைந்து போன சேரன் உடனடியாக ரேஷ்மாவிடம் மன்னிப்பு கேட்டார். அதன்பிறகும் அந்த விஷயத்தை விடாத ரேஷ்மா, சாண்டி, கவின், சரவணன் என அனைவரிடம் அதையே பேசி பேசி பிரச்சனையாக்கினார்.

டாஸ்க்கின் போது கத்தியதால்
இந்நிலையில் இன்றைய நாமினேஷனின் போது ரேஷ்மா சேரனை நாமினேட் செய்துள்ளார். அதற்கு அவர் அளிக்கும் விளக்கம், அன்றைய டாஸ்க்கின் போது என்னை கத்தியதால் நான் அவரை நாமினேஷன் செய்கிறேன் என்று கூறினார்.

அதனை மறக்காமல்
பத்து படங்களுக்கும் மேல் இயக்கிய தரமான இயக்குநர், 4 தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன். அவை அனைத்தையும் மறந்து தன்னால் ஒருவர் காயப்பட்டுவிட்டார் என்று உடன் யோசிக்காமல் மன்னிப்பு கேட்டுவிட்டார் சேரன். ஆனாலும் இதனை மறக்காமல் இன்றும் அதே காரணத்தை காட்டி சேரனை நாமினேஷன் செய்துள்ளார் ரேஷ்மா.


Click it and Unblock the Notifications











