For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிறந்தநாள் பேபி ரேஷ்மா பசுபுலேட்டி.. "கெத்து தலைவி".. வாழ்த்த குவிந்த ரசிகர்கள்!

  |

  சென்னை: முகத்தில் புன்னகை தவழ, வரும் நாட்களை சந்தோஷத்தோடு எதிர்ப்பார்க்கும் ரேஷ்மாவுக்கு அவருடைய ரசிகர்கள் செல்லமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்தாலும் சிங்கம் போல கெத்தாக அமர்ந்திருக்கும் இவருடைய துணிச்சலே வேற ரகம்தான்.

  தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் சிங்கப் பெண் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாழ்வில் வெற்றிகள் மட்டுமே வர வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆசிர்வாதங்களை அள்ளித் தெளித்துக் கொண்டுள்ளனர்.

  மோசமான உடையில் ரேஷ்மா… மொத்த அழகையும் படம் போட்டு காட்டிடாங்க!மோசமான உடையில் ரேஷ்மா… மொத்த அழகையும் படம் போட்டு காட்டிடாங்க!

  புஷ்பாவுக்குப் பொறந்த நாள்

  புஷ்பாவுக்குப் பொறந்த நாள்

  பொதுவாக நமது நெட்டிசன்கள் பிரபல செலிபிரிட்டிகளின் பிறந்த நாட்களில் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களை டிரண்டு செய்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். ஆனால் நம்ம புஷ்பா... அதாங்க ரேஷ்மாவை டிரெண்ட் செய்ய மறந்து விட்டனரோ என்னவோ அவராகவே தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டு கொண்டுள்ளார்.

  மோடிவேஷன்

  மோடிவேஷன்

  பொதுவாக வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் வாழ்க்கையில் வரும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் போன்ற மோட்டிவேட் ஆன விஷயங்களை நமக்கு பிடித்த செலிபிரிட்டி களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அதிலும் அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்ட சூழ்நிலையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

  குழந்தை பிறப்பு

  குழந்தை பிறப்பு

  குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் திருமணமும், குழந்தை பிறப்பும் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது .அந்த நிகழ்வில் ஏதேனும் தவறான எதிர்பாராத சம்பவங்களும் நடந்தால் அதையும் மீறி தமது துறையில் எவ்வாறு தொடர்ந்து போக வேண்டும் என்பதற்கு ரேஷ்மா வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும். பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொண்ட இவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது இவரது வாழ்க்கை சம்பவங்களை கேட்ட பிக் பாஸ் கண்டஸ்டன்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் கண்கலங்க வைத்தது .

  சிறு வயது கல்யாணம்

  சிறு வயது கல்யாணம்

  சிறுவயதிலேயே திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் எந்தப் பெண்ணிற்கும் வரக்கூடாது . ஒரு பெண்ணால் இவ்வளவு சோகத்தையும் வலியையும் தாங்க முடியுமா என்று என்னும் அளவிற்கு அனைவரின் கண்களிலும் கண்ணீர் குளமாகியது. ஆனால் ரேஷ்மா அந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியால் தாம் சார்ந்த துறையில் முன்னேறி வருகிறார் .இவரது தோற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்த்தால் இவருக்குப் பின்னால் இப்படியும் ஓர் சோகக்கதை இருக்குமா என்று ஆச்சரியப்பட தோன்றும் .

  எனக்கு உன்னோட OPINION தேவையில்ல | Reshma Befitting Reply to BODY SHAMERS
  2 முறை ஏமாற்றம்

  2 முறை ஏமாற்றம்

  திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்று தவறான முடிவுகளை எடுக்கும் பெண்களுக்கு மத்தியில் இரண்டு முறை திருமண வாழ்கையில் கணவனால் ஏமாற்றப்பட்டாலும், குழந்தைப் பிறப்பிலும் பல்வேறு கஷ்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டு இன்று ஒரு செலிபிரிட்டி ஆக இருந்து வரும் ரேஷ்மா ஆண்களால் மட்டுமின்றி குறிப்பாக பெண்களாலும் போற்றப்பட வேண்டியவர். இவரை போன்ற மன உறுதியும் எந்த சூழ் நிலையையும் எதிர்கொள்ளும் தைரியமும் வேண்டுமென்று அவருடைய ரசிகர்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

  வைராக்கியம்

  வைராக்கியம்

  வாழ்க்கையில் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் சந்தித்து வந்த ரேஷ்மா இனிமேலாவது அவர் சார்ந்த துறையில் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக முன்னேற வாழ்த்துவது இணையவாசிகள் நமது கடமையாகும். பொழுதுபோக்காக பல போஸ்ட்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்லும் நம் நெட்டிசன்கள் இவரது போஸ்ட்டை மட்டும் பார்க்காமல் பாஸ்ட்டையும் தெரிந்துகொண்டு அதற்காகவே அவரை வாழ்த்துவதோடு மட்டுமின்றி அவரைப்போல் மன உறுதியையும் வளர்த்துக் கொள்வோம்.

  English summary
  Actress Reshma Pasupuleti's birth day today. She has posted a post in Instagram and the fans are wishing her for a healthy life ahead.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X