ஐஸ்வர்யாவுக்கே விளையாட்டு காட்டும் ரித்விகா: நீ நடத்துமா ராசாத்தி
சென்னை: ஐஸ்வர்யாவிடம் நைசாகப் பேசி நாமினேஷனுக்கு அனுப்ப பார்க்கிறார் ரித்விகா.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஐஸ்வர்யா இதுவரை ஒரேயொரு முறை தான் நாமினேட் செய்யப்பட்டார். அவரை நாமினேட் செய்ய விடாமல் சதி செய்து வருகிறார் பிக் பாஸ்.
நாமினேட் ஆனால் மக்கள் நிச்சயம் அவரை வெளியேற்றிவிடுவார்கள் என்பது பிக் பாஸுக்கு நன்றாக தெரியும்.

நாமினேஷன்
நாங்கள் எல்லாம் அடிக்கடி நாமினேட் ஆகி மக்கள் மூலம் காப்பாற்றப்படுகிறோம். ஆனால் ஐஸ்வர்யா மட்டும் நாமினேட் ஆவதே இல்லை. அதனால் பைலிஸ்ட் பட்டியலில் சேர அவருக்கு தகுதி இல்லை என்று ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, மும்தாஜ் ஆகியோர் கமலிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஐஸ்வர்யாவை நாமினேட் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பிக் பாஸ்.
கொலவெறி
ரித்விகா ஐஸ்வர்யா மீது கொலவெறியில் இருக்கிறார் போன்று. முதல் ஆளாக ஐஸ்வர்யாவை நாமினேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரித்விகா ஐஸ்வர்யாவிடம் நைசாகப் பேசி நாமினேஷனுக்கு ஒப்புக் கொள்ள வைத்துள்ளார். விளையாடி பார்ப்போமா என்று ரித்விகா கூறுவது பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. ரித்விகா ஐஸ்வர்யாவின் மனதை மாற்றிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
வர்லாம் வர்லாம் வா ஐஸு
ஐஸ்வர்யா நாமினேஷனுக்கு செல்ல ஒப்புக் கொண்டதை பார்த்ததும் பார்வையாளர்கள் குஷியாகிவிட்டனர். அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஐஸ்வர்யாவை காப்பாற்ற ஆள் இருப்பது தெரிந்தும் அவரை வெளியேற்றத் துடிக்கும் உங்களை என்ன சொல்வது?

பிக் பாஸ்
நாம் ஏற்கனவே யாஷிகாவை வெளியேற்ற ஓட்டு போட்டுமே பிக் பாஸ் நம்மை எல்லாம் மதிக்காமல் அவரை காப்பாற்றினார். யாஷிகாவையே காப்பாற்றிய பிக் பாஸ் அவரின் செல்லக்குட்டி ஐஸ்வர்யாவை காப்பாற்ற மாட்டாரா?. யோசிங்க மக்களே யோசிங்க. இந்த நாமினேஷன் எல்லாம் கண்துடைப்புக்காக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











