Lakshmi stores serioal: இந்த பணக்காரங்களே இப்படித்தான் பாரு பாக்கிய லட்சுமி பாரு!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமிக்கு சோதனை மாதிரி, ரவியை தேஜாவுக்கு கல்யாணம் பேசி முடிக்க வந்திருக்காங்க. ஆனால், ரவி ஏற்கனவே பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டி இருக்கான்.
கடற்கரையில் சில ரவுடி பசங்க தொல்லையால், ரவுடிங்க கொடுத்த தாலியையே பாக்கிய லட்சுமிக்கு ரவி தாலிகட்ட நேர்ந்துருது. பாக்கியலட்சுமி உள்ளுக்குள் ரவியை காதலித்தாலும், இந்த கல்யாணம் எதில் முடியுமோ என்கிற நிலைமையில் கதறி அழறா.
உனக்கு பிடிக்கலேன்னா இந்த தாலியை கழட்டி போட்டுடு பஞ்சுன்னு ரவி, சொல்ல, இல்லை ரவி உங்களை எனக்கு அவ்ளோ பிடிக்கும், உங்களை நானும் லவ் பண்றேன். எப்படி இந்த தாலியை என்னால கழட்ட முடியும்னு சொல்றா.

பட்டர் பிஸ்கட்
தாலியை கட்டின கையோடு, இருவரும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, பஞ்சு மிட்டாய், பட்டர் பிஸ்கட்னு கொஞ்சிக்கறாங்க. இதை கமலா கல்யாணம் முடிஞ்ச கையோடு வீட்டில் சொல்லிக்கலாம்னு பேசிக்கறாங்க. ஆனால், பாக்கிய லட்சுமி நடந்ததை தாத்தாகிட்ட சொல்லிடறா. தாத்தா முதலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவர், பின்னர் பேத்தியோட வாழ்க்கையாச்சே... என்னாகுமோன்னு ரவியை கூப்பிட்டு பேசறார்.

அண்ணிகிட்ட சொல்லிடுங்க தம்பி
ரவி தம்பி உங்க மகாலட்சுமி அண்ணிகிட்ட சொல்லிடுங்க. யார்கிட்டயும் சொல்லாம இருந்தால் சரியா இருக்காது. மகாலட்சுமி அம்மாகிட்ட உடனடியா சொல்லிடுங்க.அவங்கதான் உங்களை எப்படி சேர்த்து வைக்கறதுன்னு யோசிப்பாங்கன்னு சொல்றார் தாத்தா. ரவியும் சரின்னு போனவன், வீட்டுக்கு போனதும், தங்கை கமலாவின் கல்யாணம் வேற இருக்கே... நம்ம கல்யாணத்தால அவ கல்யாணத்துல பிரச்சனை வந்துடக் கூடாதுன்னு சொல்லாமல் இருந்துடறான்.

தேஜாவின் மாமா
தேஜாவின் மாமா பாக்கிய லட்சுமியை கடத்தி வச்சுட்டு, ரவிக்கு தேஜாவை கல்யாணம் பேசி முடிக்கலாம்னு போறாங்க. ஏற்கனவே தேஜா விஷம் குடிச்சது போல மிரட்டி, ரவியை தனக்கு கல்யாணம் செய்து வைக்கறதா தேவராஜை வாக்கு குடுக்க வச்சுடறார். வாக்கு குடுத்த தைரியத்தில் மினிஸ்டர் சகுந்தலா தேவி, தனது பெண் தேஜாவுடன் ரவி வீட்டுக்கு வர்றாங்க.

பாக்கியலட்சுமி
மினிஸ்டர் சகுந்தலா தேவி ஆட்களிடம் இருந்து தப்பிச்ச பாக்கியலட்சுமி, மகாலட்சுமி வீட்டுக்கு வந்துடறா..அங்கே பார்த்தால் மினிஸ்டர், தேஜா எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க. என்னக்கான்னு கேட்டால், இது வேற விஷயம் பாக்கிய லட்சுமி அப்புறம் சொல்றேன்னு மகா சொல்றாங்க.

ரவிக்கு இஷ்டமா கேட்டீங்களா?
மகா அண்ணி, ரவி தம்பிக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமான்னு கேட்டீங்களான்னு கேட்க, சகுந்தலா தேவி, என்ன ரவி தம்பி தேஜாவை கல்யாணம் செய்துக்க விருப்பமான்னு கேட்கறாங்க. நான் தேஜாவை ஒரு ஃபிரண்டாத்தான் பார்த்தேன். எனக்கு பெரிய கிரிக்கெட்டர் ஆகணும். இப்போ கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்றான்.

சகுந்தலா தேவி தேவராஜை
என்ன தேவராஜ் சார் நீங்க என் பொண்ணு கையில அடிச்சு சத்தியம் செய்து குடுத்த வாக்கு என்னாச்சு. இப்படி அவமரியாதை செய்யத்தான் எங்களை வர சொன்னீங்களான்னு கேட்கறாங்க.ரவியை தனியா அழைகிசுகிட்டு போன தேவராஜ், தான் செத்துருவேன்னு சொல்லி பயமுறுத்தி அழைச்சுக்கிட்டு வர்றார்.

என் புருஷனுக்கு கல்யாணமா
மாடியிலிருந்து இறங்கி வர்றான் ரவி. பட்டர் பிஸ்கட் எவ்வளவு நேரமா தேடினேன் இப்போதுதான் வருதுன்னு பாக்கியலட்சுமி மனசுக்குள்ள சொல்லிக்கறா. என்ன லாயர் சார் தம்பி என்ன சொல்றாருன்னு கேட்க, ரவி எல்லாருக்கும் காதில் கேட்கற மாதிரி சத்தமா சொல்லுடான்னு சொல்ல, அண்ணன் விருப்பம்தான் என் விருப்பமும்னு ரவி சொல்லிட்டு, தேஜாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்றான். ரவிக்கு, என் புருஷனுக்கு கல்யாணமான்னு பாக்கிய லட்சுமி கண்ணீரோடு நின்னு பார்க்கறா.
இந்த பணக்காரங்களே இப்படித்தான்.பாரு பாக்கியலட்சுமி பாரு!


Click it and Unblock the Notifications











