கார்த்திக்– ராஜி நட்பில் விரிசலா?

By Mayura Akilan

விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் 33 எபிசோடுகளைத் தாண்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவத்தில் ஏற்படும் நட்பு, அலுவலக பாலிடிக்ஸ் என போகும் சீரியலில் கார்த்திக் - ராஜி இடையேயான நட்பில் விரிசல் ஏற்படும் போல கதை நகர்கிறது.

ஒரே அலுவலகத்தில் அருகருகே அமர்ந்து பணிபுரியும் போது ராஜியின் நட்பை காதலாக புரிந்து கொள்கிறான் கார்த்திக். ஆனால் ராஜிக்கோ அது வெறும் நட்பாகவே தோன்றுகிறது.

அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதாக கூறும் ராஜி இனி கார்த்திக் உடனான நட்பை தொடர நினைப்பாளா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

கார்த்திக் – ராஜி பிரிவா?

கார்த்திக் – ராஜி பிரிவா?

கார்த்திக் - ராஜி இடையேயான நட்பை பிரிக்க திட்டமிடுகின்றனர் சிலர். அதற்காக அவர்களைப் பற்றிய தகவலை ராஜியின் அப்பாவிற்கு தெரிவிக்கவே ஆபிசிற்கே வந்து சண்டைபோட்டு ராஜியை அழைத்துச் செல்கிறார்.

செல்போன் ஸ்விச் ஆஃப்

செல்போன் ஸ்விச் ஆஃப்

இனிமேல் ஆபிசிற்குப் போகக் கூடாது என்ற அப்பாவின் கட்டளையை ஏற்று வீட்டிலேயே இருக்கிறாள் ராஜி. செல்போனும் ஸ்விச் ஆஃப் செய்யப்படவே செய்வதறியாது தவிக்கிறான் கார்த்திக்.

விஷ்ணு – லக்ஷ்மி

விஷ்ணு – லக்ஷ்மி

கார்த்திக்கின் நிலையைப் பார்த்து விஷ்ணுவும் லட்சுமியும் கிண்டல் செய்யவே அவர்களுடன் சண்டை போடுகிறான் கார்த்திக். ஆனால் அவர்களே எதிர்பாராத நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் வருகிறாள் ராஜி.

நட்பு நீடிக்குமா?

நட்பு நீடிக்குமா?

அப்பா உடன் பேசி ஜெயித்த ராஜி, அலுவலக நண்பர்களுடன் சாதாரணமாக பேச்சை தொடங்கவே, அதை கார்த்திக்கினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுடனும் சண்டை போடுகிறான். அதற்கு ராஜி சொல்லும் பதில் கார்த்திக்கிற்கு அதிர்ச்சி அளிக்கிறது.

வெறும் நட்பு மட்டும்தான்

வெறும் நட்பு மட்டும்தான்

எதையும் பெர்மிசன் கேட்டு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறும் ராஜி. கொஞ்சம் தள்ளியே நில்லு என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறாள். நட்பில் விரிசல் விழுமா? நீடிக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

மாமா தொல்லை தாங்கலையே?

மாமா தொல்லை தாங்கலையே?

அலுவலகத்தில் மாமாவும், அவருடன் சுற்றும் இரண்டு பேரும் செய்யும் காமெடிதான் ஆபிஸ் சீரியலில் கொஞ்சம் பொழுது போக்காக இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள். சில சமயங்களில் கடி கொஞ்சம் ஓவராகவும் இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X