பச்சைக் கலர் டிரஸ்ஸில்.. அசர வைத்த ரித்திகா.. யாருடன் கம்பேர் பண்றாங்க பாருங்க ரசிகர்கள்!

சென்னை : பச்சைக் கலர் டிரஸ்ஸில் நடிகை ரித்திகா கொடுத்துள்ள போஸைப் பார்தது அப்படியே சித்து மாதிரியே இருக்கீங்கன்னு உருகி வருகிறார்கள்.

Recommended Video

Rithika சொன்ன காதல் கதை Start பண்ணிட்டாங்க| BAKKIYALAKSHMI Ezhil Amirtha | FILMIBEAT TAMIL

எத்தனை வருஷங்கள் போனாலும் நினைவுகளுக்கு மட்டும் அழிவு இல்லையே. அந்த வகையில் விஜே சித்ராவை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இப்படி ரசிகர்கள் உருகுவார்கள் என்று ரித்திகா நினைக்கவில்லை என்றாலும் சித்ராவை தத்ரூபமாக நினைவு படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணுக்குள்ளே நினைவுகள்

கண்ணுக்குள்ளே நினைவுகள்

மனிதர்களாக பிறந்தாலே இறப்பு நிச்சயம் தான் அது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் மனதிற்கு நெருக்கமானவர்களையும் பிடித்தவர்களையும் இழப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். அந்த மாதிரிதான் பார்க்கும் ரசிகர்களுக்கு எல்லாமே தேவதை போல சிரித்த முகமாக இருந்த விஜே சித்ராவின் இறப்பினை இப்ப வரைக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .அவருடைய ஒவ்வொரு செயலும் அவரை நினைக்கும் போதெல்லாம் கண்ணுக்குள்ளே வந்து நிழலாடிக் கொண்டிருக்கும்.

கெட்டிக்காரி

கெட்டிக்காரி

விஜே சித்ரா தொகுப்பாளராக மட்டுமல்லாமல் டான்ஸ் ,பாட்டு, மாடல், நடிப்பு என்று பலவற்றிலும் சிறந்து விளங்கி இருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரி. அதனால்தான் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் டாக்டரேட் வரைக்கும் படித்திருக்கிறார். நடிப்பையும் தாண்டி அடுத்தவர்களின் மனதை நன்றாக அறிந்து உதவி செய்வதிலும் ஆறுதல் அளிப்பதும் அவருக்கு நிகர் அவர் மட்டும்தான் .அதனால்தான் அவர் எப்போதுமே தனித்திறமை யோடும் தனித்துவமாக வளர்ந்து வந்தார்.

ரசிகர்களின் மனதில் அழிவில்லை

ரசிகர்களின் மனதில் அழிவில்லை

பொதுவாக நல்லவர்களை தான் கடவுள் அதிகமாக சோதிப்பார் என்பது போல அவருடைய குணத்தினாலேயே அவரை கடவுள் அனைவரிடமும் இருந்து பிரித்து சீக்கிரத்தில் தன்னுடன் இணைத்து விட்டார் போல .ஆனாலும் அவர் மறைந்த பிறகும் அவருடைய நினைவுகள் அவருடைய ஒவ்வொரு ரசிகர்களின் மனதிலும் அசை போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அவருடைய இறப்பு இரவில் வந்த பெரிய இடியாக இருந்தாலும் அவருடைய ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்.

நேசிப்பு மட்டும் குறையாது

நேசிப்பு மட்டும் குறையாது

இவருடைய ஒவ்வொரு செயல்களையும் ரசித்த ரசிகர்களால் தற்போது இவரை மறக்க முடியாமல் இவருக்காக தினமும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களும் அவர் மீது அதீத பாசத்தை வைத்திருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான ரித்திகா ஒரு போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அதே காஸ்டிம் உருகும் ரசிகர்கள்

அதே காஸ்டிம் உருகும் ரசிகர்கள்

இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர் .ரித்திகா அந்த போட்டோவில் ஏற்கனவே வெண்ணிலவே பாட்டுக்கு சித்ராவும் குமரனும் டான்ஸ் ஆடி இருப்பர். அந்தப் பாட்டுக்கு சித்ரா போட்டிருந்த அதே போல டிரஸ்சை தான் தற்போது ரித்திகாவும் போட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் சித்ராவின் ரசிகர்கள் பழைய நினைவுகளில் தவித்து வருகின்றனர் .அதனால் ரித்திகாவின் போட்டோவில் சித்ராவை நினைத்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். காலம் மாறினாலும் பாசம் குறையாது என்பதை நிரூபித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X