ஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா

By Siva

சென்னை: நான் வெற்றி பெறுவேன் என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டது என்கிறார் ரித்விகா. மேலும் ஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என்று நினைத்தால் சென்றாயனை அனுப்பிவிட்டார்கள் என்கிறார் அவர்.

பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ரித்விகா. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அமைதியாக இருந்து காரியம் சாதித்துவிட்டார்.

இந்நிலையில் அவர் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது,

யாஷிகா

யாஷிகா

நான் என் பெற்றோரை போன்று அமைதியானவள். பிக் பாஸ் 2 வீட்டிற்கு செல்லும்போது யாஷிகாவை தவிர மற்றவர்களை எனக்கு தெரியாது. நானும், யாஷிகாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்ததால் பழக்கம். முதலில் சக போட்டியாளர்களுடன் பழக கஷ்டமாக இருந்தது. 4 வாரங்கள் கழித்து சக போட்டியாளர்களுக்கு என் குணம் தெரிந்தது. அதன் பிறகு நானும் அவர்களுடன் நன்றாக பேசிப் பழகினேன்.

சண்டை

சண்டை

பிக் பாஸ் முதல் சீசனை பார்த்தபோது சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் சண்டை போடுகிறார்களே என்று நினைத்தேன். முதல் சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்குகள் மிகவும் பிடித்திருந்தது. போட்டியாளர்களில் சிலர் ஓவராக டிராமா போட்டாலும், அவர்கள் ஒரே குடும்பமாக பழகியதாக தோன்றியது.

யுக்தி

யுக்தி

2வது சீசன் துவங்கிய சில நாட்களிலேயே சின்ன விஷயங்களுக்காக நாங்களும் சண்டை போட்டோம். இந்த சீசனில் டாஸ்கின்போது போட்டியாளர்கள் வெறித்தனமாக இருந்தனர். முதல் சீசன் போட்டியாளர்கள் எந்த யுக்தியையும் பயன்படுத்தவில்லை. வெற்றி பெறுவதற்காக நான் எந்த யுக்தியையும் பயன்படுத்தவில்லை. டாஸ்குகள் செய்யும்போது விதிமுறைகளை மட்டும் பின்பற்றினேன்.

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

எனக்கு நான் உண்மையாக இருந்தேன். நான் தனியாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன், தனியாக விளையாடினேன். பாலாஜி அண்ணாவுடன் நான் முதன்முதலில் நல்ல பழக்கம் ஏற்பட்டது. சென்றாயன், பொன்னம்பலம், ஜனனியும் என்னை புரிந்து கொண்டனர். என்னுடன் பேசியவர்களுடன் நான் பேசினேன். எனக்கு அங்கு நண்பர்கள் இல்லை. குழுவை உருவாக்குவதிலும் ஆர்வம் இல்லை. எனக்கு பெரிய நட்பு வட்டாரம் இல்லை.

மக்கள்

மக்கள்

நான் நேர்மையாக இருந்தது மக்களுக்கு பிடித்து ஓட்டு போட்டுள்ளனர் என்று நினைக்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. பிக் பாஸ் வீட்டிற்கு குடும்பத்தார் வந்ததை மறக்க முடியாது. சின்னச் சின்ன சண்டைகள், பாசம் ஆகியவற்றை மறக்க முடியாது. கடைசி சில வாரங்கள் நான்கு பேர் மட்டும் இருந்தபோது போர் அடித்தது. எவிக்ஷனில் இருந்து பல முறை காப்பாற்றப்பட்டபோது வெற்றி பெற நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா டாஸ்குகள் செய்யும்போது ரிஸ்க் எடுத்தார். ஐஸ்வர்யாவால் தான் சில போட்டியாளர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். ஆனால் பார்வையாளர்களுக்கு அவரின் செயல் நியாயமாக தெரியவில்லை. சென்றாயன் வெளியேறியது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற்றப்படுவார் என்று நினைத்தோம். சென்றாயனை பலருக்கும் பிடித்திருந்தாலும் அது ஓட்டுகளாக மாறவில்லை. பலருக்கும் ஓட்டு போடுவதின் முக்கியத்துவம் தெரியவில்லை. அப்போது தான் கமல் சார் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போடுமாறு பார்வையாளர்களை கேட்டுக் கொண்டார்.

பெற்றோர்

பெற்றோர்

100 நாட்களுக்கும் மேலாக என்னை விட என் பெற்றோர் தான் டென்ஷனாக இருந்துள்ளனர். நான் அழுவதை டிவியில் பார்த்தால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். நான் 6 முறை காப்பாற்றப்பட்டதும் நான் வெற்றி பெறுவேன் என்று என் அம்மா நினைத்துள்ளார். என் பெற்றோர் கடைசி வரை எனக்காக பிரார்த்தனை செய்துள்ளனர் என்கிறார் ரித்விகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X