ஐஸ்வர்யாவுக்கு தெரியாத ரித்விகாவின் அருமை அவர் அம்மாவுக்கு தெரிந்திருக்கு

By Siva

Recommended Video

பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் வெளியான நிஜ வாழ்க்கை சோகங்கள்- வீடியோ

சென்னை: ஐஸ்வர்யா சார்பில் அவர் அம்மா மும்தாஜ், தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா தனது அம்மா மிகவும் மோசமானவர் என்று சக போட்டியாளர்களிடம் தெரிவித்தார். அவருக்கு நான் எப்படிப் போனாலும் பரவாயில்லை மாதாமாதம் பணம் வந்தால் போதும் என்று தெரிவித்தார் ஐஸ்வர்யா.

Rithvika is famous: Says Aishwaryas mother

ஐஸ்வர்யா அவரின் அம்மாவின் மோசமான குணங்களை பற்றி பெரிய பட்டியலிட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவரின் அம்மாவின் குரல் கேட்டதும் மம்மி, மம்மி என்று அவர் குதித்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை பார்த்தாலே ஓவர் ஆக்டிங்காக இருந்தது.

Rithvika is famous: Says Aishwaryas mother

நான் யார் என்பதை காண்பிக்கவே என் அம்மாவை பிக் பாஸ் வீட்டிற்கு வரவழைக்கிறேன் என்று பேசிய ஐஸ்வர்யா இப்படி அழுததை பார்த்து நம்ப முடியவில்லை. ஐஸ்வர்யாவின் அம்மாவை பார்த்து ஜனனி அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

Rithvika is famous: Says Aishwaryas mother

மும்தாஜை தனது அடுத்த அம்மா என்று அறிமுகம் செய்து வைத்தார் ஐஸ்வர்யா. உடனே அவர் மும்தாஜை கட்டிப்பிடித்து அழுதார். வீட்டின் முகப்பில் இருக்கும் பிக் பாஸ் வாசகத்தை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார் ஐஸ்வர்யாவின் அம்மா.

ஐஸ்வர்யாவின் செயலுக்காக மும்தாஜ் மற்றும் தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யாவின் அம்மா. மும்தாஜ் உனக்கு அம்மா மாதிரி, பாலாஜி அப்பா மாதிரி அவர்களிடம் அப்படி பேசாதே என்று மகளுக்கு அறிவுரை வழங்கினார். ரித்விகா ரொம்ப பிரபலமாகிவிட்டதாக கூறினார். கோபப்படாதே என்று கூறிவிட்டு கிளம்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X