மகனுக்காக மொத்தமா மாறியாச்சு.. ஷாரிக் வீட்டை என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மூத்த மகன் ஷாரிக் ஹாசன், மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தநிலையில், தனது மகனுக்காக மொத்தமாக வீட்டையே மாற்றி இருக்கிறார்.

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் ரியாஸ் கான். இவர், சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரியாக நடித்த கமலா காமேஷின் மகளான உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அன்பே சிவம், மௌகுரு போன்ற படத்தில் நடித்துள்ள உமா ரியாஸ் கான், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். இவர்,பென்சில், டான் போன்ற படத்தில் நடித்துள்ளார்.

ரியாஸ் கானின் மகன்: ஷாரிக் ஹாசன், ஜிம்முக்கு சென்ற போது மரியா நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறியதை அடுத்து பெற்றோரின் சம்மதத்தடன் திருமணம் செய்து கொண்டனர். மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், உமா இந்து மதத்தை சேர்ந்ததால் இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Riyaz Khan Shariq Haasan
Photo Credit:

ஏற்கனவே திருமணமானவர்: ஷாரிக்கை விட வயதில் மூத்தவர் மரியா, அதுமட்டுமில்லாமல் எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஜாரா என்கிற மகள் இருக்கிறாள். நான் சிங்கிள் மதராக கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்ததால், இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை ஆனால், ஷாரிக்கை பார்த்ததும் என் மனம் மாறிவிட்டது என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து, மரியாவிற்கு கடந்த ஜூலை ஆண் குழந்தை பிறந்தது.

அழகான வீடு: இந்நிலையில், ஷாரிக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் என் மகனுக்காக நாங்க மொத்தமாக மாறி அம்மா வீட்டில் ஒரு வரமாக இருக்கிறோம். வீட்டை கொஞ்சம் மாற்ற நினைத்தோம். பாப்பாவிற்கு ஏற்றபடி வீட்டை மாற்றி இருக்கிறோம் வீடு ரொம்ப அழகாகவே வந்து இருக்க நீங்களும் பாருங்க என்று அந்த வீடியோவில் ஷாரிக் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X