பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் அவுட்.. கையோடு அழைத்து வந்த முன்னாள் வெற்றியாளர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்த நான்கு போட்டியாளர்களில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் ஷெரின்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு ஷெரின், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகிய 4 பேரும் தகுதி பெற்றனர். 100 நாட்கள் கடந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் பினாலே நடைபெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் என களைக்கட்டியுள்ளது பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சி. இந்நிலையில் பிக்பாஸ் ட்ரோஃபியுன் கடந்த சீசனின் வெற்றியாளரான ரித்திவிகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார் கமல்.
ட்ரோஃபியுடன் சென்ற ரித்திவிகாவுக்கு டீ போட்டுக்கொடுத்தார் சாண்டி. அனைவரையும் ட்ரோஃபியை தொட்டு பார்க்குமாறு கூறினார் ரித்திவிகா.
பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் பேசிய ரித்திவிகா, கமலின் அழைப்புக்காக காத்திருந்தார். கமல் நான்கு பேரில் முதலாவதாக எவிக்ட் செய்யப்பட்ட ஷெரின் பெயரை அறிவித்து வெளியே அழைத்து வருமாறு கூறினார்.
இதனை தொடர்ந்து ஒரு கையில் ஷெரின், மறு கையில் ட்ரோஃபியுடன் பிக்பாஸ் கிரான்ட் பினாலே மேடைக்கு அழைத்து வந்தார் ரித்திவிகா. வாக்களித்த மக்களுக்கும் கமலுக்கும் நன்றி கூறிய ஷெரின் வாழ்நாளில் மறக்க முடியாது பிக்பாஸ் என்றார்.
பிக்பாஸ் வீட்டில் எல்லோருடனும் நல்ல முறையில் நட்பாக பழகிய ஷெரின் ஃபைனல்ஸ் வரை வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











