கடைசியில இந்த வாரம் வெளியேறப்போவது இந்த ஸ்ட்ராங் போட்டியாளரா?.. டபுள் எவிக்‌ஷன் இருக்காமே?

சென்னை: கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரையுமே விஜய் சேதுபதி எவிக்ஷன் செய்து வெளியே அனுப்பவில்லை. மேலும், புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளே நுழைந்து டிராபிக் ஜாம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஒருத்தருக்கு பதிலாக இருவர் எவிக்ஷன் ஆகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதுவும் அந்த ஸ்ட்ராங் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

bigg boss tamil 8 rj anandhi sunita

விஜே விஷால் சவுந்தர்யா பற்றி பேசி வருவது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சவுந்தர்யா தான் இந்த முறை டைட்டில் அடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. மேலும், வைல்டு கார்டு போட்டியாளர்கள் எல்லாமே வேஸ்ட் பீஸ் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

புடிச்சிருக்கா? புடிக்கலையா?: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நல்லா விளையாடும் போட்டியாளர்களையும் சீரியல் நடிகர்களையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளனர். ஆனால், அதுவே ரசிகர்களை போரடிக்க வைத்து விடுகிறது என்றும் உண்மைத் தன்மையே இல்லாதது போல டிராமா எஃபெக்ட்டை கொடுப்பதாக கூறுகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு: பிக் பாஸ் நிகழ்ச்சியை புதிதாக தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ஓவர் டாமினேட் செய்கிறார் என்றும் போட்டியாளர்களை பேச விடுவதில்லை அடக்குமுறை அதிகம் செய்வதாக அர்னவை தொடர்ந்து தர்ஷா குப்தாவும் பேட்டி அளித்த நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் கருத்தும் அதுவாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கமல் சாரையே ட்ரோல் செய்த சோஷியல் மீடியா விஜய் சேதுபதியை மட்டும் விட்டுவிடுமா என்கிற கேள்விகளும் அதை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த வாரம் நாமினேஷன்: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நாமினேட் ஆகி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் ஏகப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே இருப்பதால் இந்த வாரம் இருவரை வெளியேற்ற வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். இந்த வாரம் சாச்சனா, சுனிதா, விஷால், அருண், முத்துக்குமரன், விஜே ஆனந்தி, ஜாக்குலின், ரஞ்சித், தீபக், பவித்ரா, அன்ஷிதா என மொத்தம் 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

டேஞ்சர் ஜோனில் 3 பேர்: ரஞ்சித் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வாங்கிய நிலையில், அவர் டேஞ்சர் ஜோனில் இல்லை. அவரை விட குறைவான ஓட்டுக்களுடன் ஆஃப் லைன் போலிங்கில் இருப்பது யாரென்றால் சாச்சனா, சுனிதா மற்றும் ஆர்ஜே ஆனந்தி தான். ஆனந்தி நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி வந்த நிலையில், இந்த வாரம் சிக்கிய அவருக்கு பிஆர் டீமே பெரிதாக இல்லை என்றே தெரிகிறது. ஓட்டிங்கில் கடைசியில் உள்ளார்.

டபுள் எவிக்‌ஷன் இருக்குமா?: ஆர்ஜே ஆனந்தி மற்றும் சுனிதா கடைசியில் உள்ள நிலையில், கடந்த வாரமே சுனிதா எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த வாரம் ஆனந்தியுடன் சேர்த்து அவரை அனுப்பிடுங்க பிக் பாஸ் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனந்தி ஸ்ட்ராங்கான பிளேயர் அவருக்கு பதிலாக மினி ஜூலியாக மாறி வரும் சாச்சனாவை தயவு செய்து வெளியே அனுப்பிடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 3 பேரில் ஒருவர் அல்லது 2 பேர் இந்த வாரம் வெளியேறப்போவது உறுதி என தகவல்கள் கசிந்துள்ளன. இன்று இரவு ஷூட்டிங் முடிந்ததும் யார் வெளியேறினார் என்பது தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X