நிமிர்ந்து நடந்தா மார்பகம் பெரிசா தெரியுது.. என்னோட பிரச்னை எனக்கு.. பிக்பாஸ் RJ ஆனந்தி பளிச்

சென்னை: பலரும் பேசத் தயங்குகிற, பேச மறுக்கிற அதேபோல் பேச தவிர்க்கிற பல விஷயங்களில், வளர வளர பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தான புரிதலுடன் பேசுவதுதான். குறிப்பாக மாதவிடாய் சுழற்சி, உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒரு தெளிவான அறிவுடன் பேசுவதோ, அல்லது மற்றொருவருக்கு அவை குறித்த அறிவை உண்டாக்குவதோ அரிதினும் அரிதே. அப்படி தனது சொந்த அனுபவத்தை வைத்து பிக்பாஸ் பிரபலமான ஆர்.ஜே ஆனந்தி தனது The Book Show By Ananthi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் பலரும் அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அவர் வெளியிட்ட வீடியோவில், " நான் டீ சர்ட் போட்டு ஒரு முறை வெளியே சென்ற போது, ஒரு மூதாட்டி ஒருவர் வந்து, நீ வயசுக்கு வந்துட்டல்ல, உள்ளாடை எல்லாம் போடணும் இல்ல, இல்லையினா தெரியுமில்ல என்று கூறினார். நான் அதுவரை எனது மார்பகங்கள் குறித்து யோசித்தது கிடையாது. ஆனால் அந்த முதியவர் சொன்னது அந்த நாள் முழுவதும் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. நான் எனக்கு சௌகரியமான டீசர்ட்டை அணிந்து வருகிறேன், அது யார் கண்களுக்கு உறுத்தினாலும் அது அவர்களின் பிரச்னை. ஆனால் அந்த மூதாட்டி சொன்னது இன்று வரை எனது மனதில் உள்ளது.

RJ Anandhi Opens Up on Body Image Struggles and Breast Growth Awareness Video Goes Viral
Photo Credit:

பிரச்னை: நான் எதிர் கொள்ளும் ஒரு பிரச்னை என்றால், எனது மார்பகம் வளர வளர அது பெரிதாக தெரியக் கூடாது என்று, கைகளை மடக்கி குறுகியவாரேதான் அமர்ந்திருப்பேன். அதனால் மார்பு பெரிதாக தெரியாது. அதுவே நிமிர்ந்து அமர்ந்தால் மார்பு பெரிதாக தெரியும். கைகளை குறுக்கியவாரு அமரும் போது ஒரு கட்டத்திற்கு மேல் கூன் விழுந்தது போல ஆகிவிடும். நான் குறுகியே அமர்ந்திருந்து பழகி விட்டதால் எனது தோள்பட்டைகள் கூன் விழுந்தது போல மாறிவிட்டது. அதனுடனும் நான் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். நெஞ்சை நிமிர்த்தி நிற்க முடியவில்லை.

தைரியம்: பாலிக்கு ஒருமுறை சென்றபோது, அங்கு ஆப்பிரிக்க ஜோடி நடந்து வந்தனர். அப்போது அதில் அந்த பெண் நெஞ்சை நிமிர்த்தி நடந்து சென்றார். அதைப் பார்க்கும்போது எவ்வளவு தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் இருக்கிறார்கள் என்று தோன்றியது. மார்பகம் என்பது எனது உடலில் ஒரு பகுதி, இதனால் ஏற்படும் எதில் இருந்தும் என்னால் தப்பிக்க முடியாது. எனது மார்பகம் வளர்வது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. பாதம் சாப்பிட்டால் மார்பகம் வளரும் என்று எனது பாட்டி சொல்லி இருந்ததால், ஊட்டச்சத்து நிபுணர்கள் பாதாம் சாப்பிடச் சொன்னால் கூட, மார்பகம் வளர்ந்து விடுமே என்ற எண்ணம் வரும்.

RJ Anandhi Opens Up on Body Image Struggles and Breast Growth Awareness Video Goes Viral
Photo Credit:

பாராட்டு: இது தொடர்பாக நான் ஒரு பேட்டியில் பேசிய போது, அதன் கமெண்ட்டில் ஒரு சிலர், அவ்வளவு பெருசா ஒன்னும் இல்லையே என்று கமெண்ட் போட்டிருந்தார்கள். உனக்கு பெரிசா இருக்கா இல்லையானு நான் கேட்கலப்பா, என்னை எப்படி உணர வைத்துள்ளது என்பதுதான் அங்கு பிரச்னை" என்று பேசி உள்ளார். ஆனந்தி பேசியுள்ளது போல பல பெண்கள் தங்களது மார்பகம் தொடர்பான அறியாமை மற்றும் அதனால் இது போன்ற எண்ணத்தில் இருந்தால் கூட அதிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X