பிரியங்கா தேஷ்பாண்டேவும், கோபிநாத்தும் விஜய் டிவியை விட்டு போறாங்களா?.. ஆர்ஜே ஷா ஓபன் டாக்!

சென்னை: விஜய் டிவியில் கடந்த 18 ஆண்டுகளாக 'நீயா நானா' நிகழ்ச்சியை பல எதிர்ப்புகளை தாண்டி தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் விஜய் டிவியில் இருந்து வெளியேறப் போவதாக கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அது முற்றிலும் வதந்திதான் என ஆர்ஜே ஷார் தனது புதிய வீடியோவில் விளக்கமாக பேசியுள்ளார்.

மேலும், சமீபத்தில் 2வது திருமணம் செய்துக் கொண்ட விஜே பிரியங்கா தேஷ்பாண்டேவும் விஜய் டிவியில் இருந்து விலகப் போவதாக வெளியான தகவலுக்கும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

RJ Shah opens up about Neeya Naana Gopinath and Priyanka Deshpande exit from Vijay Tv rumours

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேன்சன் திடீரென விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்று டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை நடத்தினர். குக் வித் கோமாளி ஷோவில் இருந்த சிலரும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றதை ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். அதே போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடைபெறப் போகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் அம்பானி தான் என்றும் கூறுகின்றனர்.

விஜய் டிவியை வாங்கிய அம்பானி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை சமீபத்தில் முகேஷ் அம்பானி வாங்கி ஜியோ ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்து ஐபிஎல் போட்டி நேரலைகளை ஒளிபரப்பி வருகிறார். மேலும், கலர்ஸ் டிவியை வயகாம் நெட்வொர்க் மூலம் நடத்தி வரும் அம்பானி விஜய் டிவியையும் வாங்கி விட்டார் என்றும் அதன் காரணமாகவே விஜய் டிவி படங்கள் எல்லாம் சமீப காலமாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது என்றும் அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

ஹனிமூனுக்கு சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே: சமீபத்தில் வசி சாச்சா எனும் டிஜேவை திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே தனது 2வது கணவருடன் லண்டனுக்கு ஹனிமூனுக்காக சென்றுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டேவும் விஜய் டிவியில் இருந்து விலகப் போவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்றும் ஹனிமூன் முடிந்து மீண்டும் அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என ஆர்ஜே ஷா தெரிவித்துள்ளார்.

RJ Shah opens up about Neeya Naana Gopinath and Priyanka Deshpande exit from Vijay Tv rumours

கோபிநாத் விலகுகிறாரா?: மார்ச் மாதம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட 'மும்மொழிக் கொள்கை' தொடர்பான நீயானா நானா ஷோ ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டதால் கோபிநாத் அப்செட் ஆகிவிட்டார் என்றும் 18 ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வரும் அவருக்கு தொடர்ந்து ஒரு பெரிய சேனல் பெரிய சம்பளத்துடன் ஆஃபர் கொடுத்து கோபிநாத்தை அழைத்து வருவதாகவும் அதன் காரணமாக அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், ஆர்ஜே ஷா தனது யூடியூப் வீடியோவில் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நீயா நானா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படாது என்றும் கோபிநாத்தும் அந்த ஷோவை விட்டு வெளியேற மாட்டார் என நெருங்கிய வட்டாரத்தில் தகவல் பெற்றதாக பேசியுள்ளார்.

RJ Shah opens up about Neeya Naana Gopinath and Priyanka Deshpande exit from Vijay Tv rumours

எங்கே சென்றாலும் ஜொலிப்பார்: கோபிநாத்துக்கு இருக்கும் திறமைக்கு அவர் விஜய் டிவியில் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த சேனலுக்கு வேலைக்குச் சென்றாலும் அவர் தனியாகவே ஜொலிப்பார் என்றும் அவர் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம் என்றும் விஜய் டிவியை யார் வாங்கினாலும் கோபிநாத்தை வெளியேற்றினால் அவர்களுக்குத்தான் நஷ்டம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X