குக் வித் கோமாளியை பார்த்து காப்பியா?.. டாப் குக் டூப் குக் ரகசியங்களை சொன்ன ஆர்ஜே ஷா!

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கியுள்ளது. அதற்கு போட்டியாக சன் டிவியில் விரைவில் டாப் குக் டூப் குக் எனும் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காலம் காலமாகவே ஒரு டிவியில் ரசிகர்களை கவரும் நிகழ்ச்சி இன்னொரு டிவியில் அதே போல உருவாக்கப்பட்டு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் புரமோவை பார்த்த ரசிகர்கள் இது அப்படியே குக் வித் கோமாளி காப்பி என்று கலாய்த்து வருகின்றனர். மேலும், விஜய் டிவி க்கும் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கும் என்ன பிரச்சனை என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

RJ Shah reveals secrets about Top Cook Dupe Cook vs Cook with Comali real issue

இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஆர்ஜே ஷா வெளியிட்டுள்ளார். அதில், ஏகப்பட்ட ரகசியங்களை சொல்கிறேன் என அவர் பல தகவல்களை கூறியுள்ளார். ஆர்ஜே ஷா இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் நடுவே என்ன பஞ்சாயத்து என்பது குறித்து பேசியிருக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

குக் வித் கோமாளி: விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மீடியா மேசன்ஸ் எனும் நிறுவனம் தான் தயாரித்துக் கொடுத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் அந்த நிறுவனமே தயாரித்தது. ஆனால், இந்த முறை வெறும் குக் வித் கோமாளியை மட்டும் பண்ணுங்க என்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பண்ண வேண்டாம் என விஜய் டிவி சொன்ன நிலையில், சன் டிவியில் அதே போல குக்கரி நிகழ்ச்சியை தயார் செய்து கொடுக்க அந்த நிறுவனம் அங்கே சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.

RJ Shah reveals secrets about Top Cook Dupe Cook vs Cook with Comali real issue

ஐந்தாவது சீசன்: குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் கடந்த வாரம் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. செஃப் தாமு உடன் இணைந்து மாதம்பட்டி ரங்கராஜ் அந்த நிகழ்ச்சியில் நடுவராக பொறுப்பேற்றுள்ளார். கோமாளியாக பண்ண முடியாது என விலகிய மணிமேகலை தற்போது ரக்ஷன உடன் இணைந்து தொகுப்பாளினியாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோ என்கிற நிறுவனம் தற்போது ஐந்தாவது சீசனை தயாரித்து வருவதாக ஆர்ஜே ஷா கூறியுள்ளார்.

RJ Shah reveals secrets about Top Cook Dupe Cook vs Cook with Comali real issue

தாமு போக வேண்டியது: சன் டிவியில் ஆரம்பமாக உள்ள டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை மீடியா மேசன் நிறுவனம் உருவாக்கவுள்ள நிலையில், சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், குக் வித் கோமாளி 4 சீசன்களாக அந்த நிறுவனத்துடன் பணியாற்றி வந்த செஃப் வெங்கடேஷ் பட் அவர்களுடன் பயணிக்கலாம் என நினைத்து சன் டிவிக்கு சென்றுவிட்டார். செஃப் தாமுவும் ஆரம்பத்தில் அவருடன் வருவதாக அறிவித்த நிலையில், திடீரென விஜய் டிவி கேட்டுக் கொண்டதால் இங்கே தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் யாருக்கும் எந்த ஒரு சண்டையோ பிரச்சனையோ இல்லை. எல்லாமே வர்த்தக நோக்கத்துடன் மாற்றப்பட்டு உள்ளதாக ஆர்ஜே ஷா தனது வீடியோவில் பேசி உள்ளார். இத்தனை சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்திய ஒரிஜினல் டீம் தற்போது சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறது என்றும் இதில், எதுவும் காப்பி இல்லை என்றும் ஆர்ஜே ஷா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X