பிக்பாஸ் சீசன் 5 ல் பங்கேற்கும் பிரபல ஆர்ஜே.. யாருன்னு பாருங்க.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil season 5 Launch Date Revealed | Kamal Hassan

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

இந்நிலையில் நான்காவது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை வழக்கம் போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் முடிவில் இருந்தது நிகழ்ச்சி குழு.

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை

ஆனால் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை மிரட்டியதால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது தாமதமானது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை

பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான லோகோ புரமோ நேற்று முன்தினம் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் நிகழ்ச்சி தொடங்கி விடும் என ஹேப்பியாகியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிகர் நடிககைள் பெயர்

நடிகர் நடிககைள் பெயர்

நடிகர் அபினய், நடிகை சாந்தினி, நடிகை மைனா நந்தினி, விஜய் டிவி பிரபலம் சுனிதா ஆகியோரின் பெயரும் அடிபட்டு வருகிறது. மேலும் சீனியர் நடிகைகள் என வடிவுக்கரசி, தீபா ஆகியோரி பெயர்களும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயரும் இடம்பெற்று வருகிறது.

ஜிபி முத்து அறிவிப்பு

ஜிபி முத்து அறிவிப்பு

டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயர் பிக்பாஸ் தொடர்பாக அடிப்பட்டு வந்த நிலையில் அதனை மறுத்தும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சூசனிடம் பேச்சுவார்த்தை

நடிகை சூசனிடம் பேச்சுவார்த்தை

இதனிடையே மைனா படத்தில் வில்லியாகவும் ராட்சசன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்த நடிகை சூசனிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. திறமையான நடிகையாக இருந்த போதும் சூசனுக்கு தற்போது வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரது திறமையை காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிளாக் ஷீப் யூட்யூப் சேனல்

பிளாக் ஷீப் யூட்யூப் சேனல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல ஆர்ஜேவான வினோத் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, பிரபல ஆர்ஜேவும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலின் நிறுவனருமான ஆர்ஜே வினோத்திடமும் நிகழ்ச்சிக் குழு பேசி வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் ஆர்ஜே வினோத் நகைச்சுவையாக பேசக்கூடியவர் டைமிங்கில் காமெடி செய்பவர் என்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X