"ஃபன்"னுக்கு உத்தரவாதம்தான்.. ஆனால் "சன்"னுக்கு இது ரொம்ப புதுசாச்சே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலும், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலும் சங்கமிக்கறாங்க.. ரெண்டு நாளா இதோட பிரோமோதான் போயிகிட்டு இருக்கு.
ரெண்டு சீரியலை சங்கமிக்க வச்சு சீரியலை கொண்டு போறது விஜய் டிவி செய்த யுக்தி. விஜய் யாரைப் பார்த்து செய்தாங்களோ தெரியாது. ஆனா, சன் டிவி தொலைகாட்சி வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக இப்போ ரெண்டு சீரியல்களை சங்கமிக்க வைக்கறாங்க.

ரோஜா சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிட்டு இருந்துச்சு. இது ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடிக்கவே சன் டிவி இந்த சீரியலுக்கான நேரத்தை இரவு 9 மணிக்கு மாற்றிக் கொடுத்தது.
நடிகை குஷ்பூ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து சன் டிவியுடன் இணைந்து ஒளிபரப்பு செய்யும் சீரியல் லட்சுமி ஸ்டோர்ஸ். இந்த சீரியலும் ரேட்டிங்கில் நல்ல இடத்தில்தான் இருக்கு.

இந்த சமயத்தில்தான் ஏற்கனவே சக்ஸஸ் ஆன ஃபார்முலாவை சன் டிவி கையிலெடுத்து இருக்காங்க. வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ரோஜா சீரியலும், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலும் சங்கமிச்சு கதையை புது பாதையில்கொண்டு போயி ஒளிபரப்ப போறாங்களாம்.

இரவு 9 மணி முதல் 10 மணி வரை ரெண்டு சீரியலின் குடும்பங்களை இணைத்து கதை பண்ண போறாங்க..பார்ப்போம் தரம் எப்படி இருக்குன்னு



Click it and Unblock the Notifications











