சர்வவைர் தமிழ்...எலிமினேட் ஆன ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா

சென்னை : உலக புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் தற்போது தமிழில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தென் ஆப்பிரிக்க தீவு ஒன்றில் நடத்தப்பட்டு வருகிறது.

நந்தா, விஜயலட்சுமி, விக்ராந்த், சிருஷ்டி டாங்கே, இந்திரஜா, பார்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகிறார்கள். செப்டம்பர் 12 ம் தேதி துவங்கி, தினமும் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டது.

இரண்டு அணிகளாக பிரிப்பு

இரண்டு அணிகளாக பிரிப்பு

முதல் வாரமே எலிமினேஷன் இருக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். இதில் லஷ்மி பிரியா சந்திரமெளலி வேடர்கள் அணியின் தலைவராகவும், காயத்ரி காடர்கள் அணியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட பார்வதி

வெளியேற்றப்பட்ட பார்வதி

முதல் வாரமே சிருஷ்டி டாங்கே மற்றும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஆகியோர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எலிமினேஷனுக்கு முன்பு நடந்த பஞ்சாயத்தில் பார்வதி, எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரம் நடைபெற்ற இம்யூனிட்டி ரவுண்டில் காடர்கள் அணி வெற்றி பெற்றது. அதனால் வேடர்கள் அணியில் இருந்து தான் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட வேண்டும்.

இரண்டு எலிமினேஷனா

இரண்டு எலிமினேஷனா

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் வெளியான ப்ரோமோவில், மூன்றாம் உலகத்தில் இருக்கும் காயத்ரி ரெட்டி மற்றும் இந்திரஜா ஆகியோர் எலிமினேட் ஆவது போல் காட்டப்பட்டது. இதனால் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் என தகவல் பரவியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திரஜா, காயத்ரி இடையே ஒரு போட்டி நடத்தப்பட்டது.

கடிதம் அனுப்பிய பார்வதி

கடிதம் அனுப்பிய பார்வதி

பார்வதியும் மூன்றாம் உலகிற்கு அனுப்பப்படுகிறார். அங்கிருந்து தனது டீமுக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார் பார்வதி. அதில் மிக உருக்கமாக துவங்கி, அனைவரை பற்றியும் விமர்சித்திருந்தார் பார்வதி. சிலர் மீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். மூன்றாம் உலகில் இந்திரஜா மற்றும் காயத்ரியை சந்திக்கிறார் பார்வதி.

எலிமினேட் ஆன இந்திரஜா

எலிமினேட் ஆன இந்திரஜா

இந்திரஜா - காயத்ரி இடையே நடந்த போட்டியில் க்யூப்களை வலை போன்ற பகுதியில் தள்ளிக் கொண்டு வந்து அதை அடுக்கி வைக்க வேண்டும். நான்கு பக்கமும் நிறங்கள் ரிப்பீட் ஆகாமல் அடுக்க வேண்டும். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் காயத்ரி ரெட்டி வெற்றி பெற்றார். ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தோல்வி அடைந்து எலிமினேட் ஆகி வீட்டிற்கு செல்கிறார். இதனால் ஏற்கனவே எலிமினேட் ஆன பார்வதி சர்வைவர் ஷோவிற்குள் ரீ என்டரி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X