Siragadika Aasai: அய்யய்யோ மனோஜுக்கு என்ன ஆச்சு.. கண்ணீர் விடும் ரோஹிணி.. விஜயா போடும் கண்டீஷன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹிணி மாமா பிரச்னை தான் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. ரோஹிணியின் மாமியார் விஜயா தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார். ரோஹிணியை கடை பக்கமே வரக்கூடாது என விஜயா தெரிவித்தார். பிறகு வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். மனோஜின் பாட்டி ரோஹிணியை அழைத்து வந்து வீட்டுக்குள் சேர்த்து வைத்தார். இதன் பிறகு ரோஹிணி சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் தான் தர வேண்டும் என விஜயா ஆர்டர் போட அதற்கும் ரோஹிணி சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் ரோஹிணியையும் மனோஜையும் பிரித்து வைக்க பிளான் போட்டு வருகிறார் விஜயா என்னதான் நடக்கிறது என்பதை காண்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. கூட்டுக்குடும்பமாக இருக்கும் அண்ணாமலை குடும்பத்திற்குள் நாளொரு வண்ணம் ஏதாவது ஒரு பிரச்னை வந்து விடுகிறது. ரோஹிணியை பழிவாங்கும் விஜயா, மறுபக்கம் மீனாவை வளர விடாமல் தடுக்கும் சிந்தாமணி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. ரோஹிணி மாமா விசயம் தெரியவந்ததிலிருந்து விஜயாவின் ஆட்டம் கொஞ்சம் ஓவராக செல்கிறது. ரோஹிணியை மனோஜ் பக்கமே நெருங்க விடாமல் செய்து வருகிறார். எங்கு தனது பையனும் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சத்தில் தவிக்கிறார்.

மீனாவிற்கு வரும் புது பிரச்னை: மீனாவை கெட்டிக்காரி என்று விஜயா பாராட்டுவது ஆச்சரியம் அளித்தாலும் அவரது வளர்ச்சியை தடுக்க விஜயாவும் பல பிளான்களை செய்து வருகிறார். ஏற்கனவே சிந்தாமணி மீனாவிற்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில், இதில் விஜயாவும் சேர்ந்து அவரது வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கிறார். இந்த சூழலில் தற்போது வெளியான புரோமோவில் புதியதாக மீனாவிற்கு புதிய ஆர்டர் கிடைக்கிறது. என்னடா இன்னும் அந்த சிந்தாமணி வரவில்லை என்று நினைக்கும் முன்பே பிரச்னை கொடுக்க வந்துவிட்டார். இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் யார் டெபாசிட் பணமாக இரண்டு லட்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்த ஆர்டர் என கூறப்படுகிறது. பின் பணம் இல்லாமல் எப்படியோ சமாளித்து பணத்தை ஏற்பாடு செய்த மீனா அண்ணாமலையிடம் கூறிவிட்டு பணம் கட்ட செல்கிறார்.
பறிபோகும் பணம்: மீனா பணம் ஏற்பாடு செய்ததை அறிந்த விஜயா உடனே சிந்தாமணிக்கு போன் செய்து போட்டு கொடுக்கிறார். சிந்தாமணி தனது அடி ஆட்களை வைத்து மீனாவின் பணத்தை திருடிவிடுகிறார். பணத்தை பறிகொடுத்த மீனா இதை எப்படி மீட்பார் முத்து உதவி செய்வாரா, விஜயா ஏன் இப்படி செய்கிறார் என விறுவிறுப்புடன் செல்கிறது. மீனா வளர்ச்சி அடையும் ஒவ்வொரு நேரத்திலும் சிந்தாமணி முட்டுக்கட்டை போடுவதும் அது ஒரு விசயமே இல்லை என மீனாவும் தடாலடி பிளான் போட்டு முறியடிப்பதும் சவாலான காட்சிகளாக இருக்கின்றன. ஆனால், இந்த சிந்தாமணி திருந்தமாட்டாரா ஏன் அடுத்தவர் உழைப்பில் மண்ணை போடுகிறார் என்ற அளவிற்கு கோபமும் பார்வையாளர்களுக்கு வரத்தான் செய்கிறது.

முத்துவுடன் மீண்டும் உரசல்: ஏற்கனவே முத்துவிற்கும் போலீஸாக வரும் அருணுக்கும் உரசலாகவே இருக்கிறது. இதில், முத்துவின் கொழுந்தியா அருணை காதலித்து வருகிறார். இந்த விசயம் தெரியவந்தால் முத்து என்ன கதி ஆகப்போகிறார் என தெரியவில்லை. முத்து இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என பலவித சஸ்பென்ஸ்களோடு சிறகடிக்க ஆசை சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முத்து காரை நிறுத்தி அருண் மெஷின் கொண்டு வந்து நீ குடித்திருக்கியா இல்லையா என்று ஊது என்று சொல்ல, அதற்கு முத்து அவரிடம் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். நான் குடிக்கவில்லை அதனால் நான் ஊத மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு இன்னொரு கான்ஸ்டபிள் வந்து என்ன பிரச்சனை நீங்க ரெண்டு பேரும் எதற்காக மீண்டும் மீண்டும் பிரச்சனை செய்றீங்க என்று கேட்கிறார். பிறகு முத்து உங்களை மாதிரி அன்பாக சொன்னால் கேட்பேன் சார். நான் ஊதுகிறேன் எனக் கூறிவிட்டு காரை எடுத்து செல்கிறார் முத்து.
மனோஜிற்கு காய்ச்சல்: மீனா ஒரு பக்கம் இப்படி அவதிபடுகிறார் என்றால் மற்றொரு பக்கம் பாவம் ரோஹிணி. ரோஹிணியின் நிலையை நினைத்து பார்வையாளர்களே கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டார்கள். சிறகடிக்க ஆசை சீரியலின் மற்றொரு புதிய புரோமோ வீடியோவில் ரோஹிணியை விஜயா வறுத்தெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த புரோமோவில் மனோஜிற்கு திடீரென நள்ளிரவில் துடிக்கிறார். பதறியடித்து வரும் ரோஹிணிஅவரது உடம்பை தொட்டுப் பார்த்தால் காய்ச்சல் என தெரியவருகிறது. இந்த இரவு நேரத்தில் மனோஜிற்கு பணிவிடை செய்து அவருக்கு ஆறுதலாகவும் பக்கத்தில் இருக்கிறார். பின்னர், மனோஜிற்காக சமையல் செய்தபோது வரும் விஜயா கோபத்துடன் ஏய் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய் என கேட்க ரோஹிணி எதையும் மறைக்காமல் மனோஜிற்கு காய்ச்சல் என கூறுகிறார்.

ரோஹிணி அவரது மீது அவ்வளவு அன்பா: பிறகு விஜயா மனோஜ் அறைக்குள் சென்று அவனது உடலை பார்த்து கொதித்து போனார். டேய் என்னடா ஆச்சு என கேட்டதும். அதற்கு மனோஜ் காய்ச்சல் மா என்கிறார். பிறகு, ரோஹிணிகிட்ட பேசாமல் இருப்பதால் காய்ச்சல் வந்திடுச்சுனு நினைக்கிறேன் என விஜயாவிடம் தெரிவி்கக அப்போது ரோஹிணி அதை கேட்டு விடுகிறார். இந்த புரோமோவை பார்க்கும் போது ரோஹிணியிடம் இருந்து மனோஜை பிரித்து வைக்க விஜயா சதி செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால், விஜயாவிற்கு என்ன லாபம் என நினைத்தாலும் வாய்ப்பில்லை. ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை பிறந்ததை மறைத்திருக்கும் ரோஹிணி என்ன செய்வது என்றே தெரியாமல் அவதிப்பட்டு வருகிறார். ரோஹிணி மறைத்திருக்கும் இந்த விசயம் தெரியவந்தால் விஜயா, அண்ணாமலை என்ன முடிவெடுப்பார்கள் என்பதே தெரியாது. இதில், முத்து பார்லர் அம்மாவை கண்டபடி கலாய்த்து வருகிறார்.

லாய்க்கில்லாத மனோஜ்: ஓடுகாளி என பட்டம் கொடுத்திருக்கும் மனோஜை படித்த முட்டாள் என்றும் எதற்கும் லாய்க்கில்லாதவன் என்றும் தெரிவிப்பார்கள். ரோஹிணி மாமா விசயத்தில் மனோஜ் மனைவி பக்கம் நின்றாலும் ரோஹிணியை விட்டு விலகித்தான் இருக்கிறார். ரோஹிணி விசயம் தெரியவந்தால் மனோஜ் எடுக்கும் முடிவு என்ன? முத்து அடிக்கும் கமெண்ட்களையும் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பது பலகுரல் ஸ்ருதி செய்யும் சேட்டைகளும் காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











