Chocolate Serial: சூப்பரா இருக்கு.. கிரியேட்டர்ஸ் விரும்பிப் பார்க்கும் டிவி சீரியல்கள்!

சென்னை: தொலைக்காட்சியில் மெகா சீரியல்கள் ஆரம்பித்த புதிதில் புதிய கிரியேட்டர்ஸ் அவ்வளவாக சீரியல்களை விரும்பியோ மெனக்கெட்டோ கூட பார்ப்பதில்லை. ஆனால், போகப்போக டிவி சீரியல்கள் பெரியத்திரை எழுத்தாளர்கள், இயக்குநர்கள், பாடல் ஆசிரியர்கள் என்று பலருக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தன.

Recommended Video

Chocolate Serial Iniya | Sun Tv | Priyanka | Rahul ravi

இதனால், பெரியத்திரையின் பல துறைகளை சார்ந்த வல்லுனர்களும் தொலைக்காட்சி சீரியல்களை விரும்பிப் பார்க்க ஆரம்பித்து உள்ளனர். சீரியல்களுக்கு வசனம் எழுத, சீரியல்களை இயக்க, டைட்டில் பாடல்கள் எழுத, ஒளிப்பதிவு செய்ய என்று பல துறைகளை சார்ந்த பெரியத்திரை கலைஞர்களுக்கு சின்னத்திரை வரவேற்று வாய்ப்பு அளித்து வருகிறது.

தொலைக்காட்சி சீரியல்கள் சினிமா தரத்துக்கு இப்போது உயர்ந்து, அழகிய இளம் நடிகைகள், நடிகர்கள், கலர்ஃபுல் லொக்கேஷன்ஸ் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை தொலைக்காட்சி சானல்களும் முன்னெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன.

சன் டிவி

சன் டிவி

சன் டிவி தங்கள் சானல்களில் ரேட்டிங் கூடுதலாக பெறும் சீரியல்கள், கலர்ஃபுல்லாக.. கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்களில் ஷூட் செய்யப்பட்ட வேண்டும் என்பதை இப்போது வலியுறுத்த ஆரம்பித்து உள்ளது. அப்படித்தான் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இருக்கிறது. அடுத்து கல்யாண வீடு சீரியல் அதாவது திருமுருகன் சீரியல்கள் என்றால் கதைக்கும் மற்ற சாதாரணமான லொக்கேஷன்களுக்கும் சன் டிவி அதிகம் கேள்வி கேட்காதபடி மாற்றங்கள் இருக்கும். இதனால் திரு பிக்சர்ஸுக்கு எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை.

சித்தி 2 நாயகி

சித்தி 2 நாயகி

நாயகி, சித்தி 2 சீரியல்கள், தயாரிப்பாளர்களின் முத்திரை பதித்த நிறுவனங்கள். இதனால், இதை பற்றியும் சன் டிவி பெரிதாக எதிர்பார்த்து எதையும் இவர்கள் மீது திணிப்பதில்லை. அதே போல கண்மணி சீரியலில் வயல் வெளிகள் என்று காண்பிக்கப்படுவதால், இதுவும் தயாரிப்பாளர் முத்திரை பதித்த நிறுவனத்தின் சீரியல், கதை நன்றாக இருந்து, ரேட்டிங்கில் இடம் பிடித்தால் ஓகேதான் என்கிற லெவலில் சன் டிவி இவர்களை எந்த விதத்திலும் வற்புறுத்துவது இல்லை.

ரன் ராசாத்தி

ரன் ராசாத்தி

ரன், ராசாத்தி சீரியல்கள் அதற்கான ஒளிபரப்பு நேரத்தில் ரேட்டிங்கை தக்க வச்சுக்க அவர்கள் படும் பாடே போதும் என்று இவர்களையும் சன் டிவி எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்வதில்லை. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மகராசி, சாக்லேட் ஆகிய சீரியல்களில் கொஞ்சமா சினிமா வாசனையை கொண்டு வந்து மதிய நேரத்தின் ஹைலைட் சீரியலாக இரன்டையும் கொண்டுவர சன் டிவி மும்முரமாக அறிவுறுத்தி வருகிறது. அந்த விதத்தில் சுரேஷ் கிருஷ்ணா சாக்லேட் சீரியலின் இயக்குநராக களம் இறங்கி இருக்கார்.

பெரியத்திரை சின்னத்திரை

பெரியத்திரை சின்னத்திரை

இதனால், தொலைக்காட்சி சீரியல்கள் வாய்ப்புக்கள் வந்தாலும், அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டு, நல்ல படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்று பல துறைகளை சார்ந்தவர்களும் தொலைக்காட்சி சீரியல்களை பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். வாய்ப்புக்கள் சின்னத்திரை, பெரியத்திரை என்று எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அதை எதிர்க்கொண்டு, நல்ல படைப்புக்களைத் தர தங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் நினைக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X