அப்பா பத்தி யாரும் பேசாதீங்க.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தேம்பி தேம்பி அழுத ரோஜா!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்போதுமே சிரிப்பையும், மகிழ்ச்சியையும் பரப்பும் ஒரு பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. பல சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் நடுவர்களாக செஃப் தாமு, செஃப் கௌஷிக், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருடன், நடிகை ரோஜா நான்காவது நடுவராக இணைந்துள்ளார். இந்த சீசன் ஆரம்பித்தவுடனே பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

குக் வித் கோமாளி: இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், "நம்ம வீட்டு கல்யாணம்" சுற்று, சிரிப்பை தாண்டி உணர்ச்சிகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. போட்டியாளர்கள் தங்கள் திருமண வாழ்க்கை அனுபவங்களையும், அதில் நடந்த நெகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.அப்போது, அரவிந்த் மற்றும் சங்கீதா தம்பதிகள் தங்களது வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அரவிந்த் "என் கல்யாணத்தில் என் அப்பா இல்லை என்று உருக்கமாக பேசினார்.

Cooku with Comali Roja
Photo Credit:

தேம்பி தேம்பி அழுத ரோஜா: இதைக் கேட்டு கொண்டு இருந்த புகழ், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, "என் கல்யாணத்திலும் என் அப்பா இல்லை" என்று சொல்லி கண்கலங்கினார். உடனே அங்கிருந்தவர்கள் புகழை கட்டி அணைத்து சமாதானம் செய்துகொண்டு இருந்தனர். இந்த உணர்ச்சிமிகு தருணத்தை பார்த்து மனம் உடைந்த நடிகை ரோஜா, டேய் புகழ் அழாதடா... நீ அழுவதைப்பார்த்தா... எனக்கும் அழுகை வருது என சொல்லிக்கொண்டே இருந்த ரோஜா, திடீரென தன் அப்பாவை நினைத்து அழத்தொடங்கினார். என் கல்யாணத்திலும் என் அப்பா இல்லை... அவரு எனக்கு உயிரு... அப்பாவை பற்றி யாரு பேசினாலும் எனக்கு கஷ்டமாக இருக்கும்.... யாரும் அப்பா பத்தி பேசாதீங்க என்று கூறி, குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுதார். அவரின் இந்த உருக்கமான உணர்ச்சி வெளிப்பாடு அங்கு இருந்த அனைவரையும் அமைதியாக்கியது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் மேடை, அந்த நொடியில் முழுவதும் உணர்ச்சியில் மூழ்கியது. இதைப்பார்த்த ரசிகர்கள் சிரிக்க வைத்த இந்த நிகழ்ச்சி இப்படி கண்கலங்க வைத்துவிட்டதே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X