Roja serial: அனல் பறக்கும் ரோஜா.. செமையா வசனம் எழுதறீங்களா ராஜா!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் கதை ரொம்ப நன்றாக இருக்கிறது. அதோடு, வசனம் அனல் பறக்குது. ஒரு வீட்டில் அர்ஜுன், அவனின் அக்கா கணவர் டைகர் மாணிக்கம் இருவரும் வக்கீல்.

ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு வக்கீல்கள், வீட்டு பெண் ஒருத்தியைப் பற்றிய வழக்கு பற்றி சும்மா பேசும்போதே வசனம் நன்றாக இருக்கிறது.. இருவரும் நீதி மன்றத்தில் ஆஜரானால் எப்படி இருக்கும்?

அதையும் பார்க்க தயாராக வேண்டும் என்பது போல மக்களின் அதாவது சீரியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அப்படித்தான் கதையும் இருக்கப் போகிறது. இப்படிப்பட்ட மோதல்களை சுவாரஸ்யமான வசனங்கள் மூலம் பார்க்கும்போது ரோஜா சீரியல் இன்னும் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

அர்ஜுன் ரோஜா

அர்ஜுன் ரோஜா

அர்ஜுன் இளம் வக்கீல், அவனுக்கு பொண்ணுங்க, கல்யாணம் என்றாலே அலர்ஜி. ஆஸ்ரமத்தில் இருந்து வெளியில் வந்துவிட்ட அணு, ரோஜாவின் உண்மையான ஆதாரங்களை எடுத்துக்கொண்டு, அன்னபூரணி அம்மா அதாவது அர்ஜுன் வீட்டுக்கு, இன்னும் சொல்லப் போனால் அர்ஜுனின் அக்கா மற்றும் அக்காவின் கணவர் டைகர் மாணிக்கம் பெண்ணாக வீட்டுக்குள் நுழைந்து விடுகிறாள். அடுத்து என்ன, அர்ஜூனுடன் கல்யாணம் என்று பேச்சு ஏற்படுகிறது.அர்ஜுனுக்கு அணுவைப் பிடிக்கலை. வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும்போது அர்ஜுன் ரோஜாவை பொண்டாட்டி என்று அழைத்து வந்துவிடுகிறான்.

ரோஜா அர்ஜுன்

ரோஜா அர்ஜுன்

ரோஜாவும், அணு வளர்ந்த அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள்தான். இவளின் ஆதாரத்தை திருடி வந்துதான் அர்ஜுன் வீட்டில் அடைக்கலம் புகுந்து கொள்கிறாள் அணு. அர்ஜுன் ரோஜாவை ஒரு வருஷத்துக்கு பொண்டாட்டியா நடிக்க அக்ரிமெண்ட் போட்டு அழைத்து வந்திருந்தாலும், காலப் போக்கில் அவள் மீது காதல் வந்து இப்போது ரோஜா அர்ஜுனின் மனைவியாக வாழ்கிறாள். இருந்தாலும், ரோஜாவின் அம்மா அப்பாவை கண்டு பிடித்த பிறகே அவளுடன் தாபத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான் அர்ஜுன்.

அர்ஜுன் ரோஜாவுக்கு

அர்ஜுன் ரோஜாவுக்கு

ரோஜாவுக்கு யாரும் இல்லை, அவளுக்கு தான் ஒரு அனாதை என்கிற ஃபீலிங் வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து, அவளை கண்ணின் இமை போல பாதுகாப்பது என்பது தனது தலையாய கடமை என்பது போலவே நடந்துக் கொள்கிறான். அவள் அழுதால் அர்ஜுன் துடிதுடித்து போகிறான். அவளை யாராவது எதாவது சொன்னால், அவள் என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவள், எனக்கு எல்லாரும் இருக்கீங்க, அவளுக்கு நான் மட்டும்தான் இருக்கிறேன்னு சொல்றது கண்ணில் நீரை வரவழைக்குது.

வசனகர்த்தா கதாசிரியர்

வசனகர்த்தா கதாசிரியர்

அணு ஒரு குற்றவாளி என்று அர்ஜுன் தனது மாமாவிடம் வாதம் வைப்பது, இல்லை என்று அணுவின் அப்பா டைகர் மாணிக்கம் வாதிடுவது என்று வாதத்தையும், வசனத்தையும் மிக நன்றாக கொண்டு போனதுக்கு வசனகர்த்தாவுக்கு சபாஷ். ஒரு அனாதை பெண்ணை பொண்டாட்டியாக வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டால் எப்படி அவளை நடத்த வேண்டும் என்பதை கதையில் அழகாக கொண்டு போயிருப்பதற்காக கதாசிரியரும் சபாஷ் போடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X