அடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபி இல்லேன்னாலும் எந்த குறையும் இல்லாமல்தான் சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
ராஜாவை காதலிச்ச ரோஜா கிட்டத்தட்ட படுக்கையில் இருக்கா.. ஆடாத ஆட்டம் ஆடி, கடைசியில் தான விரிச்ச வலையில் தானே விழுந்துட்டா.
ரோஜாவை கேங் ரேப் பண்ணிய பிறகு உதிர்ந்த, கசங்கிய ரோஜாவா படுக்கையில் கிடக்கா ரோஜா.

ஆட்டம் ஆரம்பம்
படுக்கையில் கிழிந்த நாராக கிடக்கும் ரோஜாவை பார்த்து அவளது அப்பாவும், அக்கா சூரியாவும் கதறி அழறாங்க. ராஜா உள்ளுக்குள்ள ரொம்ப ஹேப்பியா இருக்கான். அப்பா,அக்கா, ராஜாகிட்ட மன்னிப்பு கேட்கறா ரோஜா.

அப்பா கடைசி ஆசை
அப்பா நான் இனிமே உயிரோட இருக்க மாட்டேன்..நிச்சயம் தற்கொலை செய்துக்குவேன்.. எனக்கு கடைசி ஆசை இருக்குப்பா..அதை நிறைவேத்தி வைங்கன்னு கேட்கறா.

எத்தனை ஆசை
உயிரோட இருந்து எத்தனை ஆசைன்னாலும் கேளும்மா..நான் நிறைவேத்தி வைக்கறேன்.. கடைசி ஆசைன்னு மட்டும் சொல்லாத என்னால தாங்க முடியாதுன்னு அப்பா வெளியில போயிடறார். அப்பாவை சமாதானப் படுத்த அக்காவும் வெளியில போயிடறா.

வினை பிடிச்ச ராஜா
ராஜாவும் வெளியில் போக, ராஜான்னு கூப்பிடறா ரோஜா. சொல்லு ரோஜான்னு ரொம்ப பவ்யமா கேட்கறான். என் கடைசி ஆசையை நீ நிறைவேத்தி வைன்னு கேட்கறா.சொல்லுன்னு சொல்றான் அவன். வினை புடிச்ச பயலாச்சே..இந்த நேரத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க பார்க்கறான்.

மயக்க மருந்து ரோஜாவுக்கு
சூர்யாவுக்கு கோபின்னா உயிர்...அவளை நான் படாத பாடு படுத்திட்டேன்.அவ கோபியை கல்யாணம் செய்துகிட்டு நல்லாருக்கணும்... அதை நீதான் ராஜா அப்பாவோட சேர்ந்து கோபிக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு சொல்றா. அப்பாவை கூப்பிடுன்னு ரோஜா சொல்ல,

என்னோட ஆட்டம்
அப்பாவை கூப்பிடறேன்னு போனவன், கம்பவுண்டரை அழைச்சுட்டு வந்து கண்ணை காமிக்கறான்.பிறகு என்ன..மயக்க மருந்தை மூக்குல சுவாசிக்க வச்சு..இனி என்னோட ஆட்டத்தை பாருடி..நீ மயக்கத்துலயே கிடக்க போறடின்னு சொல்றான்.
இந்த மாதிரி இருக்க கூடாது...சீரியல்களிலில் இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்கள், எது நல்லது எது கெட்டதுன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லது.


Click it and Unblock the Notifications











