Kalyana veedu serial: ரோஜா திரும்ப வந்துட்டான்னு சொல்லுங்க குருவே!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் பெண்களா சேர்ந்து ஒரு காரியத்தில் தைரியமா இறங்கி இருக்காங்க. பார்க்க நிஜமா ரொம்ப நல்லாருக்கு.
கோபியின் மூன்று தங்கைகள், ஸ்வேதா, சூர்யா, ரோஜா, ஜெயந்தி அம்மா எல்லாருமா சேர்ந்து ராஜாவை பிடிச்சு சூர்யாவை அவன்கிட்டே இருந்து காப்பாத்தணும்.
ராஜாவோட சேர்ந்து சுத்தும் அதுவும் ரோஜாவை சீரழிச்ச செல்வம் கும்பலைப் பிடிச்சு கொடுக்கணும்னு கlளத்துல இறங்கி இருக்காங்க. பெண்களா சேர்ந்து செய்யும் காரியமில்லையா பார்க்க சுவாரஸ்யமா இருக்கு.

தங்கை ரோஜா
அக்கா சூர்யாவை காப்பாத்த ஆஸ்பத்திரியில் ட்ரீட்மென்டில் இருந்த ரோஜா ஸ்வேதாவுடன் சேர்ந்து தப்பிச்சுடறா. செல்வம் ஆட்களில் ஒருத்தனைப் பார்த்துட்டு, ரோஜாவும், ஸ்வேதாவும் அவனைப் பின் தொடர்ந்து போனவர்கள், கண் சிமிட்டும் நேரத்தில் அவனை தப்பவிட்டுடறாங்க. சரி, வாங்க ஸ்வேதா.... முக்கியமான இன்னொருத்தர் வீட்டுக்கு போகலாம்னு அழைச்சுட்டு போறா ரோஜா. அங்கே போனால் அது ராஜாவோட குருநாதர் வீடு. போலீஸ் பாதுகாப்பு போட்டு இருக்கேன்னு ஸ்வேதா கேட்க, அவன் இங்கே வந்தாலும் வருவான்னுதான் பாதுகாப்பு போட்டு இருப்பாங்க. வா ஸ்வேதா பின் பக்க வாசல் வழியா போலாம்னு ரோஜாஅழைச்சுட்டு போறா.

ராஜா கெட்டவனாயிட்டான்
ராஜா கட்டிப் போட்டபடியே கிடக்கிறார் குருநாதர். ரோஜா அவரின் கட்டை அவிழ்த்து விட சொல்லிட்டு, குருவைப் பார்த்து பயமா இருக்கான்னு கேட்கறா. இல்லைம்மா... பாவமா இருக்கு... எந்த பொண்ணுக்கும் உன் நிலைமை வர கூடாதுன்னு சொல்றார்.கண் கலங்கறா ரோஜா... நடந்தது போகட்டும் ரோஜா...நீ இனிமே ரொம்ப தைரியமா இருக்கணும்னு குரு சொல்றார். இங்கே வந்தானா ராஜான்னு கேட்க...வந்தான்..என்னை கட்டிப்போட்டுட்டு பணத்தை கொள்ளையடிச்சுட்டு போயிட்டான் ரோஜா...ரொம்ப கெட்டவனா ராஜா மாறிட்டான் ரோஜான்னு சொல்றார்.

ராஜாவுக்கு புத்தி
ராஜாவுக்கு நீங்களாவது புத்தி சொல்லக்கூடாதா குருவேன்னு ரோஜா கேட்க...அவன் என்னை மீறி அப்பவே போயிட்டான் ரோஜா... இவ்ளோ கெட்டவனா மாறுவான்னு நான் நினைக்கலைன்னு சொல்றார். அவன் உங்களைப் பார்க்க வந்தான்னா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுங்கன்னு சொல்றா. என்னன்னு குருநாதர் கேட்க. ரோஜா ஈஸ் பேக்னு சொல்லுங்க. ரோஜா வந்துட்டான்னு சொல்லுங்கன்னு கெத்தா சொல்றா.

ரோஜா சூப்பர்
ரோஜா மாதிரி பாதிக்கப்பட்ட பொண்ணுங்க இப்படி கெத்தா பேசறது நார்மல் வாழ்க்கைக்கு உடம்பு நல்லானதும் திரும்பி வர்றதுன்னு எல்லாமே பார்க்க நல்லாருக்கு. இப்படியே இவளது வாழ்க்கை ரொம்ப இயல்பா போகணும். அல்லது ரோஜாi உதாரணமான கேரக்டரா மீண்டும் மீண்டும் காமிக்கப்பட்டு ,அவள் கேரக்டர் சீரியலில் டிராவல் பண்ணனும். இப்படி எல்லா சீரியல்களிலும் இயக்குநர்கள் கிடைக்கும் சிறு சிறு காட்சிகளில்கூட மக்களுக்கு நல்லதை சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











