Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அதன் ஹீரோ சிபு சூரியன் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவரே சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் 2018 ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி, ராஜேஷ், காயத்ரி, டாக்டர் சர்மிளா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நடித்து வந்த பல கேரக்டர்களை மாற்றப்பட்டு விட்டனர். கதைக்களமும் பல விதங்களில் மாறி மாறி சென்று கொண்டிருக்கிறத. இருந்தாலும் சுவாரஸ்யமாக இருப்பதால் பலரும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ஃபேவரைட் onscreen pair
ஆரம்பத்தில் 48 எபிசோட்கள் வரை தனுஷ் என்பவர் இயக்கி வந்த நிலையில், 49வது எபிசோட் முதல் தற்போது வரை சதாசிவம் என்பவர் இயக்கி வருகிறார். கிட்டதட்ட 1100 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் லீட் ரோலில் நடிக்கும் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா தான். ரொமான்ஸ், க்யூட்டான காதல் எக்ஸ்பிரஷன்ஸ் ஆகியவற்றால் இந்த ஜோடி பலவரின் ஃபேவரைட் onscreen Pair ஆக இருந்து வருகிறது.

பார்க்கவே சூப்பரா இருக்குமே
இந்த சீரியலில் வழக்கறிஞர் அர்ஜுன் பிரதாப் ரோலில் சிபு சூரியனும், அவருக்கு ஜோடியாக டைட்டில் ரோலான ரோஜா கேரக்டரில் பிரியங்காவும் நடித்து வருகின்றனர். அர்ஜுனின் மாஸ் ஹீரோ வேலைகள், ரோஜா கொஞ்சி கொஞ்சி அர்ஜுன் சார் என கணவரை கூப்பிடுவது ஆகியன பார்ப்பதற்கே செம சூப்பராக இருக்கும். இவர்கள் வராத எபிசோட்கள் தான் போரான எபிசோட்களாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

சீரியலிலிருந்து விலகுகிறார் சிபு சூரியன்
கன்னட நடிகரான சிபி சூரியன் ரோஜா சீரியல் மூலம் தான் தமிழில் அறிமுகமானாகி உள்ளார். ரோஜா தவிர தமிழில் லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக,கண்ணான கண்ணே, வணக்கம் தமிழா, ரோஜா ரோஜா தான் போன்ற சீரியல்களில் அர்ஜுன் பிரதாப் கேரக்டரிலேயே கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். கன்னடத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ளார். சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கும் சிபு சூரியன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் செம ஸ்டையிலான போட்டோக்களுக்கு லைக்குகள் குவியும்.

ஏன் என்ன காரணம்
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக சிபு சூரியன் அறிவித்து, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் மாதத்துடன் இந்த சீரியலில் எனது ஷுட்டிங்கை முடித்துக் கொள்ள போகிறேன். நீண்ட யோசனை, தயாரிப்பு நிறுவத்துடன் பேசி எடுத்த பரஸ்பர முடிவிற்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் புதிய பயணத்தை துவங்க முடிவு செய்துள்ளேன்.

அர்ஜுன் எனக்கு எப்பவும் ஸ்பெஷல்
குட்பை சொல்வது எப்போது எளிதான ஒன்றல்ல. ஆனால் சில சமயஙங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அர்ஜுன் கேரக்டர் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என்மனதிற்கு நெருக்கமான ஒன்று. உங்களின் தொடர்ந்த ஆதரவு, அளவில்லாத அன்பிற்கு என்னுடைய நன்றி. நீங்கள் இல்லை என்றால் இன்று நான் இங்கு இல்லை. தொடர்ந்து புதிய சுவாரஸ்யமான ப்ராஜக்ட்களுடன் தொடர்ந்து உங்களை என்டர்டைன் செய்வேன். எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும், ஆசிகளும் எனக்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.

வருத்தத்தில் ரசிகர்கள்...அடுத்து என்ன நடக்கும்
சிபு
சூரியனின்
இந்த
முடிவை
ஏற்க
முடியாமல்
பலரும்
வருத்தம்
தெரிவித்துள்ளனர்.
அதே
சமயம்,
உங்களின்
முடிவை
நாங்கள்
மதிக்கிறோம்
என்றும்,
உங்களின்
புதிய
பயணத்திற்கு
வாழ்த்துக்கள்
என
ஏராளமானோர்
வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.
சிபு
சூரியனின்
இந்த
அறிவிப்பால்
ஆகஸ்ட்
மாதத்திற்கு
பிறகு
ரோஜா
சீரியலில்
எந்த
மாதிரியான
மாற்றங்கள்
வரும்,
அர்ஜுன்
கேரக்டர்
மாற்றப்படுமா
அல்லது
சீரியலையே
முடித்து
விடுவார்களா
என
ரசிகர்கள்
ஆர்வமாக
காத்திருக்கிறார்கள்.