Summer Special: கல்யாணம் ஆனா என்ன? பீச்சில் காத்து வாங்கும் பிரியங்கா நல்காரி லேட்டஸ்ட் போட்டோஸ்!
சென்னை: சின்னத்திரை ரசிகர்களின், குறிப்பாக இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் 'ரோஜா' என்ற ஒற்றை கதாபாத்திரத்தின் மூலம் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. தனது எதார்த்தமான நடிப்பாலும், துறுதுறுப்பாலும், அழகாலும் தமிழ்நாட்டின் வீடுகள்தோறும் நம்ம வீட்டு பெண்ணாகவே மாறிப்போனார்.
2018 முதல் 2022 வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி, டிஆர்பி-யில் சாதனை படைத்த 'ரோஜா' சீரியலுக்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'நள தமயந்தி' சீரியலிலும் நடித்து அசத்தினார்.

மலேசியாவில் திருமணம்: கடந்த 2023 ஆம் ஆண்டு ராகுல் வர்மா என்பவரை மலேசியாவில் உள்ள கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறினார் பிரியங்கா. திருமணத்திற்குப் பிறகு அவர் சீரியலில் நடிக்க மாட்டார் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொடர்ந்து திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக, புடவை மற்றும் சுடிதாரில் மட்டுமே பார்த்து பழகிய பிரியங்காவை, தற்போது இணையத்தில் மாடர்ன் உடைகளில் பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் காத்து வாங்கும் சில ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கடல் அலைகளுக்கு நடுவே, ஸ்டைலான கருப்பு நிற ஸ்லிட் கட் உடையில், கூலிங் கிளாஸ் அணிந்து செம்ம மாஸாகவும், அதே சமயம் கிளாமராகவும் போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா. அவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. எங்க ரோஜாவா இது? என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் தங்களது லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications