மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் லாஸ் உங்களுக்குத்தான்.. சீரியல் நடிகையின் குதூகலமான போட்டோஸ்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. காதல், நகைச்சுவை என விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடர்களில் ஒன்றான இந்த தொடரில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரியங்கா நல்காரி. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, தனது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோவை பகிர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த பிரியங்கா நல்காரி, அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். மாடல் அழகியான இவர், ஒரு சில விளம்பர படத்திலும், தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்களில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடித்தார். 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் திட்டத்தட்ட 5 வருடத்திற்கு பிறகு 2022ம் ஆண்டு முடிவந்தது. இதில் சிபு சூர்யன், நியாஷ் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகை பிரியங்கா நல்காரி: ரோஜா கேரக்டரே இவரின் அடையாளமாக மாறியது. இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், பிரியங்கா ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிரியங்கா நல்காரி தனது காதலர் தொழிலதிபர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டில் ஆனார். அவரது திருமணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

க்யூட்டான போட்டோ: திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்காமல் இருந்த பிரியங்கா, மலேசியாவில் தனது கணவரோடு சேர்ந்து ஓட்டல் பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி அதை கவனித்து வந்தார் உணவகத்தில் பில் போடும் வேலையை செய்து வருவது போல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த தொழிலில் அதிக லாபம் கிடைப்பதாகவும் கூறியிருந்தார். அதன்பிறகு, ஜீ தமிழின் நள தமயந்தி என்ற தொடரில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இந்த சீரியலும் முடிவுக்கு வந்தது. தற்போது ரோஜா 2 சீரியலில் நடித்து வருகிறார்,
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் ப்ரியங்கா தற்போது அனிமேஷன் திரைப்படமான மோனா 2 படத்தில் வரும் கதாபாத்திரமாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை பதிவிட்டு கமெண்ட் பாக்ஸில் பிரியங்காவை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











