ரோஜா சீரியலில் பேய்க்கு வந்த சோதனை..பேயே சிரிப்பா சிரிக்குது.. வேணாம்டா முடியல!

சென்னை : சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி என்று பல்வேறு தொலைக்காட்சியின்அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கள் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் TRP ரேட்டிங்கை எகிற வைத்துவிடுகின்றன.

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக இருந்து வருகிறது.

ரொமான்ஸ்,காதல், கொஞ்சல் என்று சென்று இருந்த சீரியலில் ரெண்டு நாளா பேய்பிடித்து ஆட்டுகிறது. சும்மாவே இந்த சீரியலை நெட்டிசன்ஸ் ஓட்டு வாங்க இதுல பேய் வந்தா சும்மா இருப்பாங்களா.

ரோஜா

ரோஜா

ஆயிரம் எபிசோடுக்கு மேல் சென்ற இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் அர்ஜூன் என்ற ரோலிலும், நாயகி பிரியங்கா நல்காரி ரோஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஹீரோவும், ஹீரோயினியும் சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லாம். எப்போது பார்தாலும் இவர்களை சுற்றியே குறிப்பாக, ரோஜாவை கொல்வதை வைத்தே கதை நகர்கிறது.

அரைச்ச மாவு

அரைச்ச மாவு

ரோஜாவுக்கு மட்டும் எங்கிருந்து தான் எதிரி வருவாங்கனு தெரியல எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. பாக்குற நமக்கே இவ்வளவு கடுப்பாகுதே அந்த ஹீரோயினை நினைச்சத்தான் பாவமா இருக்கு. அரைச்ச மாவையே அரைச்சிக்கிட்டு இருந்த நேரத்துலதான். ரோஜா கர்ப்பம்னு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னாங்க. அடுத்தது என்ன மறுபடியும் அனு ரோஜாவின் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க நினைப்பாருனு, நாம சோதித்த அதே கதைதான்.

செம ட்விஸ்ட்

செம ட்விஸ்ட்

அதுல ஒரு ட்விஸ்ட் வைத்து பேய் கதையா மாத்தி இருங்காங்க. ஜெயிலுக்கு அனுப்பியதற்காக ஷாம் ரோஜாவை பழிவாங்க துடிக்கிறான். ரோஜா தனியாக காரில் வெளியே வருவதை தெரிந்த கொண்ட ஷாம் அவனுடைய கூட்டாளிகளுடன் ரோஜாவை கடத்தில் நடுக்கடலுக்கு சென்று தண்ணீரில் வீசி விடுகிறாரன். ரோஜா தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு கல்லையும் அவருடன் சேர்த்து கட்டி கடலில் வீசுகிறார்கள். அங்கதான் ட்விஸ்ட் வைத்து இருக்கிறார் இயக்குநர், ரோஜாவுடன் சேர்த்து கட்டிய கல்லு சாமி கல்லாம். கொய்யால என்னமா யோசிச்சு இருக்காங்க.

பேய்க்கு வந்த சோதனை

பேய்க்கு வந்த சோதனை

கோவில் கோவிலான போன ரோஜாவை சாமி காப்பாத்தாம இருக்குமா... நடுக்கடலில் சுவிம்மிங்க போட்டு ரோஜா எப்படி வந்தாருனு கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால், வந்ததுமே பேயாட்டம் ஆடி வருகிறார். காத்துல மூடும் ஜன்னல்... நீளமான தலை முடி.. கரண்ட் போய் போய் வருது.. அப்போ அது கன்ஃபாமா பேய்தான் என ஆடியன்ஸ் மனசை தேற்றிக்கொண்டார்கள். இருந்தாலும், இது சந்திரமுகி பேயா? அருந்ததி பேயா? இல்லை அரண்மனை பேயா? என்று, கேட்டும் இது பேய்க்கு வந்த சோதனை காலம், இந்த சீரியலை பேய் பார்த்தா சிரிப்பா சிரிக்குது என்றும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X