என்ன டைரக்டர் சார்.. எந்த காலத்துல இருக்கீங்க.. பக்தின்னாலும் ஒரு ஞாய தர்மம் வேண்டாமா.. முடியல!
Recommended Video
சென்னை: ரோஜா சீரியலில் காட்டப்படும் காட்சிகளை பார்த்து போதும் நிறுத்துங்க என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டனர் ரசிகர்கள்.
சுவாரசியமாக சென்ற ரோஜா சீரியல் பிரைம் டைம்மான மாலை 7 மணிக்கு மாற்றப்பட்டது. இதனால் அதனை பார்க்கும் ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்தது.
ஆனால் திடீரென என்னவானதோ தெரியவில்லை, ரொம்ப மொக்கை போடுகிறார் இயக்குநர். சீரியலின் நாயகியான ரோஜாவுக்கு பூஜை அறையில் வெடித்த பாமால் கண்பார்வை போய்விட்டது.

அமுதநாயகி அம்மா
சிகிச்சையளிக்க வந்த மருத்துவரை ஆள் வைத்து அனு கடத்த, தற்போது அங்காள பரமேஸ்வரிதான் துணை என அமுதநாயகி அம்மாவின் ஆசிரமத்தில் முகாமிட்டுருக்கின்றனர் அர்ஜுன், ரோஜா மற்றும் கல்பனா.

பரிகாரம் செய்தால் பார்வை
அதனையும் கண்டுபிடித்து விட்டு அவர்களுக்கு எதிரேயே ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி வில்லத்தனத்தை காட்டி வருகின்றனர் அனு, யசோதா மற்றும் அவரது கணவர். பரிகாரத்தை முறைப்படி செய்தால் ரோஜாவுக்கு கண்பார்வை வரும் என்ற நம்பிக்கையில் முழு மூச்சாக பரிகாரம் செய்து வருகிறார் அர்ஜுன்.

கொலை செய்ய திட்டம்
ஆனால் ரோஜாவுக்கு கண்பார்வை கிடைக்காது கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த மூவர் அணி, பரிகார பூஜையை கெடுக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. அதன் உச்சபட்சமாக அர்ஜுனை கொலை செய்யவும் திட்டம் போட்டு விட்டனர்.

முள் படுக்கை
ஏற்கனவே முள் செருப்பு, அக்னி விளக்கு என பழைய மாவில் பூரி சுடும் டைரக்டர் தற்போது முள் படுக்கை வரை சென்று விட்டார். இதனை பார்த்தே கடுப்பாகி போயுள்ளனர் ரசிகர் பெருமக்கள்.

பக்தி முத்திப்போய்..
இந்நிலையில் அந்த முள் படுக்கையில் பாய்சனை தடவி கதையை முடிக்க பார்க்கிறார் அனு. அப்போதும் மாலையை தூக்கி போட்டு மஞ்சள் தண்ணியை ஊற்ற வைத்து என பக்தி முத்தி போய் டைரக்டர் தனிப்பாதையில் கதையை நகர்த்தி வருகிறார்.

ஞாய தர்மம் வேண்டாமா?
இதனால் கடுப்பான ரசிகர்கள் என்ன டைரக்டர் சார் சரக்கு தீர்ந்துவிட்டதா? கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. லாஜிக்கே இல்லாமல் எங்களையும் முட்டாளாக்காதீர்கள்.. முடியாவிட்டால் தெய்வமகள் சீரியலை போல சட்டுபுட்டென என்ட் கார்டை போட்டுவிடுங்கள்.. என்னதான் பக்தி என்றாலும் ஒரு ஞாய தர்மம் வேண்டாமா.. முடியல.. என சீரியலின் யூட்யூப் பக்கத்தில் கும்பிடாத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











