Roja Serial: கட்டுனா அர்ஜுன் மாதிரி ஒருத்தனை கட்டிக்கோணும்!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுன் தன்னை நம்பி வந்த பெண்ணை எப்படி, காப்பாத்தி, அவளை மகிழ்வா வச்சு இருக்கணும்னு அடுத்தவர்கள் சொல்வதற்கு உதாரணமாக இருக்கிறான்.

வீட்டில் ஒவ்வொருவரையும் எதிர்த்து, அதே நேரம் அவர்கள் மனதும் புண்படாதபடி வார்த்தைகள் அதிரடியாக பதிலுக்கு பதில் என்று விழுகிறது. இதற்காக வசனகர்த்தாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கதையும் ஒரு இடத்தில் கூட எந்த விதத்திலும் இடறி விழாமல், பிசகி மாறாமல தெளிந்த நீரோடை போலச் செல்கிறது. இதற்காகாக கதாசிரியரைப் பாராட்டலாம். இப்படிப் பாராட்டிக் கொண்டே போனால், ரோஜா சீரியல் குடும்பத்தையும் பாராட்டலாம்.

அணு ஏமாற்றுக்காரி

அணு ஏமாற்றுக்காரி

அணுவும், ராஜாவுடன் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். இவள் ரோஜாவின் குழந்தைப் பருவத்து ஆதாரங்களைத் திருடி வந்து அர்ஜுன் வீட்டில் தான்தான் அன்னபூரணி அம்மாவின் பேத்தி, கிரேட் லாயர் டைகர் மாணிக்கத்தின் மகளென்று அடைக்கலம் புகுந்துடறா . அன்னபூரணி அம்மாவின் மூத்த மகள் வயிற்று பேத்திதான் இந்த அணு என்று பாட்டியும் நம்பிக்கொண்டு இருக்காங்க. இந்த சமயத்தில் தாய் மாமன் மகன் அர்ஜுனும் ஒரு நல்ல லாயர்.இவனை கல்யாணம் செய்துக்க அணு ஆசைப்பட , அர்ஜுனுக்கு அணுவைப் பிடிக்கலை.

கான்டிராக்ட் கல்யாணம்

கான்டிராக்ட் கல்யாணம்

ஆஸ்ரமத்தில் பையா கணேஷ் என்கிற முக்கியஸ்தர் கொலையானதில் ஆஸ்ரமத்தை மூடி, சாந்த மூர்த்தி ஐயாவையும் ஜெயிலில் போட்டு விட்டதால், பாவம் அங்கிருந்த அனாதைகள் எங்கு போவார்கள்.அணு, ரோஜா இடத்தில் தான்தான் என்று ஆதாரம் காண்பித்து அவர்கள் வீட்டில் புகுந்துவிட, இப்படி போக்கிடம் இல்லாமல் தவித்த ரோஜாவுக்கு சாந்த மூர்த்தி ஐயா கேஸை எடுத்து நடத்தறேன்னு முன் வரும், அர்ஜுன்,அணுவுடனான கல்யாணத்தில் இருந்து தப்பிக்க, ரோஜாவை ஒரு வருட ஒப்பந்தத்தில் பொண்டாட்டி என்று அழைச்சுட்டு வர்றான்.

அர்ஜுனை நம்பி வந்தவள்

அர்ஜுனை நம்பி வந்தவள்

அன்று அந்த வீட்டுக்கு வந்த ரோஜா, முழுக்க முழுக்க அர்ஜுனை நம்பியே வந்தவள். இதை கதாசிரியர் ஒவ்வொரு காட்சிளும், ஒவ்வொரு பிரச்சனையிலும் அர்ஜுன் அதாவது ரோஜா புருஷன் மூலம் நிரூபிக்க மறக்காமல், அதே சமயம் மிகவும் உணர்வுப் பூர்வமான கட்சிகள் வைப்பதும், அதற்கு ஏற்ற மாதிரியான வசனங்களை அர்ஜுன் பேசுவதும் என்று சீரியல் ரொம்ப கலக்கலாக ஒளிபரப்பாகிட்டு வருது.

இந்த வசனங்கள்

இந்த வசனங்கள்

ரோஜாவை வீட்டை விட்டு போன்னு சொல்றீங்க... உங்களுக்கு எல்லாம் நான் இருக்கேன்.ரோஜா என்னை நம்பி வந்தவ, அவளுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்னு சொல்றது... ரோஜா கல்யாண வீடு மாதிரி எல்லாருக்கும் நீ சமைச்சு போட்டே.ஆனால், இப்போ நம்மகூட யாருமே பேசறதில்லை. உன்னை ஒரு நாள்விட்டுட்டு போனேன்.உன்னை பட்டினி போட்டுட்டாங்க ரோஜா. இனிமேலே நீ யாருக்கும் சமைக்க வேண்டாம். உனக்கும், எனக்கும் மட்டும் சமைச்சு வச்சால் போதும்.புரியலை நாம் இந்த வீட்டில் தனியா சமைச்சுக்கலாம்னு சொல்றது... நீ என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவ ரோஜா... அப்படி இருக்கும்போது, உன்னை நான் எப்படி இவங்க முன்னால் விட்டு கொடுக்க முடியும்னு சொல்றதுன்னு வசனங்கள் சூப்பர்.

பெண்கள் கட்டுனா அர்ஜுன் மாதிரி ஒருத்தனை கட்டிக்கோணும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X