சின்னத்திரை ரொமான்ஸ் ஜோடிகள்
சினிமாவோ சின்னத்திரையோ ரொமான்ஸ் ஜோடிகளுக்குப் பஞ்சமில்லை. நாயகன் நாயகிகளின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் அந்த சீரியல் சக்சஸ்தான்.
ரொமான்ஸ் ஜோடிகளுக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களின் கொஞ்சல், சிணுங்கள், செல்லப் பெயர்களில் அழைப்பது என சினிமாவை விட சின்னத்திரையில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன.
இதில் ரசிகர்களைக் கவர்ந்த சில ரொமான்ஸ் ஜோடிகளை பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

தென்றல் தமிழ்-துளசி
சன் டிவியின் தென்றலில் தமிழ் - துளசி ஜோடியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்களின் சந்திப்பு மோதலில் ஆரம்பித்து பின்பு திருமணத்தில் முடிந்தது. குட்டிம்மா என தமிழ் கொஞ்சுவது அநேக ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது. இந்த ஜோடி டாப் 1 என பரிசு கூட வாங்கியுள்ளது.

சரவணன்-மீனாட்சி
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி ஜோடியின் கொஞ்சல்களை அடித்துக் கொள்ள யாருமே கிடையாது. இதை எல்லாம் பார்க்கும் போது அட வாழ்க்கையில் ரொம்ப மிஸ் பண்றோமே என்று அநேக ரசிகர்களுக்குத் தோன்றுகிறதாம்.

தெய்வமகள் கார்த்திக் – சத்யா
அழகான இளமையான காதல் ஜோடி கார்த்திக் - சத்யா. இப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. ரொமான்ஸ் இப்பொழுதுதான் ஆரம்பமாகியிருக்கிறது.

நாதஸ்வரம் கோபி – மலர்
சன் டிவியின் நாதஸ்வரத்தில் ஆதர்ஸ்ச தம்பதிகள். எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழும் இந்த ஜோடி நிறைய இல்லத்தரசிகளை கவர்கிறதாம்

உதிரிப்பூக்கள் லட்சுமி – சக்தி
சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிய இந்த ஜோடி சிரமத்திற்கு இடையே காதலில் இணைந்தது. சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் அநேகம் பேரை கவர்ந்தது. அதற்குள் கதையில் நிறைய திருப்பங்கள்.

ஆபிஸ் கார்த்திக் – ராஜி
விஜய் டிவியின் புதிய தொடர் ஆபிஸ். அலுவலக நட்பும், கொண்டாட்டமும்தான் கதை. கார்த்திக் ராஜி இடையே நட்பாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது எனினும் இவர்களும் நம்முடைய ரொமான்ஸ் லிஸ்டில் இணைந்து விட்டனர்.

பொம்மலாட்டம் கதிர் – பாரதி
பொம்மலாட்டம் தொடரில் கதிர் - பாரதி ரொமான்ஸ் கவிதையாக நகர்ந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பத்தில் இந்த ஜோடி பிரிந்துவிட்டது. மீண்டும் இணைவார்களா பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











