எக்ஸஸ் அழகை திறந்து காட்டி.. மயக்கும் பார்வையால்.. கிறங்கடித்த கண்ணம்மா!
சென்னை: நெட்டிசன்களால் பிரபலமடைந்த பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா தற்போது மீண்டும் நெட்டிசன்களால் வைரலாக பரவி வருகிறார்.
அது போதாதென்று அவர் தற்போது மயக்கும் பார்வையால் ரசிகர்களை பாடாய்படுத்தி வெளியிட்டிருக்கும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

கருப்பு கண்ணம்மா
இந்த சீரியலில் இவர் எந்த அளவிற்கு நெட்டிசன்களால் பிரபலமடைந்தாரோ அதே அளவிற்கு இன்ஸ்டாகிராமில் பெரும் பிரபலம் அடைந்து வருகிறார் .கண்ணம்மா சீரியலில் பல பேருக்கு இவரது பெயர் ரோஷினி என்று கூட தெரியாத அளவிற்கு இந்த சீரியல் மூலமாக கண்ணம்மா பெயரில் செட் ஆகிவிட்டார்.

கலக்கல் ப்ரமோ
ஆனாலும் தன்னுடைய நிஜ உருவம் வேறு என்று ரசிகர்களுக்கு அடிக்கடி போட்டோ சூட் மூலமாக நிரூபித்து வருகிறார். பாரதிகண்ணம்மா ச சீரியலில் கண்ணம்மா கையில் பேக்கோடு வெளியான ப்ரமோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை ரொம்பவே பிரபல படுத்தி விட்டார்கள். ஆனாலும் அது வரைக்கும் அந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்தது.

சூப்பர் பிசி
தற்போது நன்றாகவே டிஆர்பி அதிகமாகி பிரபலமாகிவிட்டது .ஆனால் நெட்டிசன்கள் இன்னமும் அந்த சீரியலை விட்டுவிடுவதாக இல்லை தற்போது கண்ணம்மா பாரதி வேடமிட்டு ஸ்கூல் பங்க்ஷனில் பேசுவது போல ஒரு காட்சி வெளியானது. அந்த சீனில் பாரதியால் கண்ணம்மாவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவர் மேடையில் உட்கார்ந்து இருக்கிறார் .

மீம்ஸ்
இதனை வைத்து மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது இந்த காட்சியை வைத்து போடும் மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது. என்னதான் இந்த சீரியலுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்கள் போட்டாலும் அதனை கண்டுகொள்ளாத ரோஷ்னி ஹரிப்ரியன் தன்னுடைய மாடலிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார் .
கண்ணம்மாவா இது
அதில் எடுக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட மறக்கவில்லை.
அந்த மாதிரி தான் தற்போது ரோஷ்னி ஹரிப்ரியன் வெளியிட்ட வீடியோவை பார்த்து கண்ணம்மா வா இப்படி மாறி விட்டார் என்று வாயடைத்துப்போய் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு என்ன மாதிரி கமெண்ட் போடுவது என்று தெரியாமலேயே சிலர் புலம்பி வருகிறார்கள்

மாடர்ன் லுக்
அந்த அளவிற்கு படு மார்டனாக ஹாட் லுக்கு விட்டு பார்வையாலே ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார். இந்த வாரம் வேலண்டைன்ஸ் டே வாரமாக இருப்பதால் பலர் சந்தோஷமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் சிங்கிள்ஸ் நிலைமையோ பரிதாபமாகத்தான் இருக்கிறது .ஆனால் அந்த சிங்கிள்ஸை இந்த மாதிரி லுக்கு விட்டு பாடாய் படுத்துகிறார் என்று சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .

கண்ணிமைக்க மறுக்கும் ரசிகர்கள்
அதிலும் சிலர் கண்ணிமைக்க மறந்தது போட்டோவில் இவருடைய இயற்கை அழகை அணு அணுவாக ரசித்து வருகிறார்களாம். அதனால் என்ன மாதிரி கமெண்ட் போடுவது என்று தெரியாமல் தங்களுடைய ஹாட்டை பறக்கவிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் சில ரசிகர்கள் இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் சேர்வார்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

முட்டி மோதி
அதற்கு அவரோ இருவரும் சேர்ந்தால் இந்த சீரியல் சுவாரசியம் இல்லாமல் போய்விடும் அதனால் இப்படி தான் இன்னும் கொஞ்ச நாளைக்கு முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் இருப்போம் என்று கூலாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பலர் இந்த சீரியலில் பார்த்து என்னை சிங்கப்பெண் என்று அழைத்து வருகிறார்கள் .

முன்னுதாரணம்
நான் கருப்பாக இருக்கிறேன் என்று சீரியல் மூலமாக கதாநாயகியாக மாறிவிட்டேன் பலபேருக்கு முன்னுதாரணம் இருக்கிறேன் என்று கூறிவருகிறார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல இந்த சீரியலில் நான் நடிக்கும் போது சில நேரங்களில் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது .நான் இந்த சீரியலில் காசுக்காக நடித்துக்கொண்டிருக்கிறேன் .

சமூகம் மாற வேண்டும்
ஆனால் உண்மையில் பல பெண்களின் வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்படும்போது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.அதனால் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து தனது குழந்தைகளுக்காக தன்மானத்தோடு வாழும் பெண்கள் அனைவரும் தான் சிங்கப்பெண்கள் என்று கூறியிருக்கிறார் .


Click it and Unblock the Notifications











