டைட் டி-ஷர்ட், கர்லிங் ஹேர்.. கலக்கும் கண்ணம்மா.. என்னம்மா இப்படி அசத்தறீங்களேம்மா!
சென்னை : அமைதியின் சொரூபமாக பார்த்த கண்ணம்மா தான் தற்போது மாடர்ன் உடையில் பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார்.
கன்னத்தில் கை கொடுத்து தலையை சாய்த்து பார்க்கும் பார்வையால் கிறங்கிப் போன ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்து ரசித்து வருகின்றனர்.
பலருக்கு பேச்சை விட மெளனமே சிறந்த பதில் என்றும் ஒரு அழகான தத்துவத்தை கண்ணம்மா உதிர்த்துள்ளார்.

அழகி ரோஷ்னி
அழகோ அழகு என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் அளவிற்கு தற்போது ரோஷ்னி ஹரிப்ரியன் மாடர்ன் உடையில் கலக்கி இருக்கிறார் .இதுவரைக்கும் பார்த்த கண்ணம்மா வேறு ,இனி பார்க்கப் போகும் ரோஷ்னி வேறு என இவரைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். மாடர்ன் உடையில் தரிசனத்தை கொடுத்திருந்தாலும் இப்படி பார்த்து ஏங்க வைக்கிறீங்களே என புலம்பி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிகரிப்பு
விஜய் டிவியில் பெரும் பரபரப்பாக பல ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது .இதுவரைக்கும் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வந்தாலும், நாளுக்கு நாள் இதற்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர். தற்போது கண்ணம்மாவின் இரு குழந்தைகளுக்காக வீட்டில் இருக்கும் குழந்தைகளும் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டது .

இப்படி வேறு யாராலும் முடியாது
கண்ணம்மாவாக வலம்வந்த ரோஷ்னி தற்போது சமையல் அம்மாவாக குழந்தைகளின் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த சீரியலில் முதலில் இவர் கதாநாயகியாக நடிக்கும் போது பலர் இவரெல்லாம் கதாநாயகியா என இவர் காதுபடவே பேசி இருக்கின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் காலம் பதில் சொல்லும் என பொறுமையாக இருந்ததற்கு தற்போது வென்று காட்டியிருக்கிறார் .

பெண்களுக்கு முன்மாதிரியாக
இவரைப் பற்றி பேசிய அதே நபர்கள்தான் இவர் இல்லாமல் வேறு யாராலும் இந்த சீரியலில் இவ்வளவு அழகாக நடிக்க முடியாது என புகழ்ந்து வருகிறார்களாம். இவர் முதல் முதலில் இந்த சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது நடிப்பில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் .இவருக்குள் இருக்கும் திறமையை இவர் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் .அந்த அளவிற்கு தற்போது ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார் .

ரசிகர்களின் கொஞ்சல்கள்
பல பேருக்கு ரோல்மாடல் ஆகவும், கணவனால் கஷ்டப்படும் பெண்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். அதனாலே பெண்களின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இளைஞர்களை கவரும் வகையில் மாடல் உடையில் கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக பரவி வருகிறது .
Recommended Video

யாருடா இது
இவரை இந்தமாதிரி பார்த்ததும் யாருடா இந்த பொண்ணு கண்ணம்மா மாதிரியே இருக்குதே என்று சிலர் குழம்பி வருகின்றனர் . புடவையில் இரு குழந்தைகளுக்கு தாயாக பார்த்து வந்த ரசிகர்கள் இவரை மாடல் உடையில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனாலும் கருப்பு பேரழகி ,சாக்லேட் நிறத்தழகி, தன்மான சிங்கம் என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











