புல்லரிக்க வைக்கும் ரோஷ்னி.. இப்படிப் பண்ணா எப்படி.. அலுத்துக்கும் ரசிகர்கள்!
சென்னை : புதுசு கண்ணா புதுசு என்று புல்லரிக்க வைத்திருக்கிறது ரோஷ்னி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் கெட்டப்.
அட போங்கங்க உங்களை எப்படி பார்த்தாலும் அழகுதான் என ரசிகர்களே சர்டிபிகேட் கொடுத்தாச்சு. அந்த அளவுக்கு ஓவர் அழகா இருக்காராம்.
எத்தனை கெட்டப் போட்டாலும் உங்களை அடிச்சுக்க யாரும் இல்லையே எனவும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

க்யூட் கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தெரியாதவர்களே இருக்க முடியாது தினமும் ப்ரோமோவை அடிக்கடி போட்டு பார்க்காதவர்களையும் பார்க்க வைத்து விடுகின்றனர். டிவியில் இருந்து ஒரு பக்கம் இதற்கு விளம்பரம் என்றால் நெட்டிசன்கள் ஒரு பக்கம் இந்த சீரியலை தினமும் ட்ரோல் பண்ணி வருகின்றனர் .அதிலும் அந்த சீரியலின் கதாநாயகியை ஒரு நாள் கூட ரெஸ்ட் இல்லாமல் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

டிரோல் ஓவர்தான்
இந்த சீரியலில் கதாநாயகியும் நாயகனையும் நெட்டிசன்கள் தினமும் பாடாய் படுத்தி எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சீனையும் அப்படியே தூக்கி போட்டு ட்ரோல் செய்து விடுகின்றனர். ஆனாலும் ரசிகர்கள் தற்போது இந்த சீரியலை தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். கண்ணம்மாவின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டத்தை பல வருடமாக பார்த்து வந்ததாலோ என்னவோ பலருக்கும் இந்த சீரியல் பிடித்துவிட்டது.
Recommended Video

ரோஸ்னியின் கலக்கல் போஸ்
ஒரு டிஎன்ஏ ரிப்போர்ட் காக உலகமே காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ரோஸ்னி மைண்ட் ரிலாக்ஸ்க்காக அடிக்கடி போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு சீரியலையும் தாண்டி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .ஏற்கனவே இவருக்கு இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்னரே அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.

செம அழகு
இவர் நடிப்பிற்கு வருவதற்கு முன்பு மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .அந்த சமயத்தில் தன்னை தானே மாடலாக பல போட்டோக்களை எடுத்து அதை எடிட் பண்ணி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் .அதை பார்த்து தான் இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது .முதன்முதலில் இந்த சீரியலில் இவர்தான் கதாநாயகி என்பதைக் கேட்டதும் பலரும் ஷாக்காகி இருக்கின்றனர்.

பிசிக்கு மத்தியில் போட்டோஸ்
தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் ஒரு சில நேரத்தில் ஒரு வீடியோவை எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை எடுத்து இரண்டு நாள்களுக்கு பிறகு தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார். ஆனால் அவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் லைக்களும் கமெண்ட்களும் மலைபோல உயர்ந்து வருகிறது. அந்த போட்டோவில் 'நாங்கள் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம் .சிரிக்க மறந்து விடுகிறோம் .புன்னகைக்க ஒரு நினைவூட்டல்' என சிரித்தபடியே வீடியோவை எடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











