Kizhakku Vasal Serial: தேவராஜுக்கு பதில் மகனும் நாகப்பனுக்கு பதில் மகளும் என்ன ஊர்டா இது!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் அந்த கிராமமே இரண்டு பட்டு கிடக்கிறது இரு ஆட்களால்.
தேவராஜ், நாகப்பன் அந்த ஊரின் இரண்டு பெரிய தலைக்கட்டுகள். ஆனால், இருவருக்கும் எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது.
இவர்கள் இருவர் பக்கமும் கிராமத்து மக்கள் பாதி பாதியாக பிரிந்து கிடக்கின்றனர்.

நாகப்பன் தேவராஜ்
தேவராஜ் நாகப்பனில் தேவராஜ் அமைதியாக இருந்து காரியத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதனால் பல உயிர்களும் பலியாகி வருகிறது. நாகப்பன் எதிலும் நேர் வழியாக போக வேண்டும் என்று கோபத்தில கத்தி இருப்பதையும் கோட்டை விட்டு ஏமாறுபவர். ஆனால், தன்னை சேர்ந்த மக்கள் நலத்துக்காக எதையும் செய்வார்.

இன்ஸ்பெக்டர் சம்மன்
இரண்டு பேரையும் அடக்க முடியாது என்று முடிவுக்கு வந்த இன்ஸ்பெக்டர், இப்போது கோவத்தின் உச்சத்துக்கே போயிடறார். இருவரையும் ரவுடி என்று டிக்ளேர் செய்து இருவர் வீட்டுக்கும் சம்மன் அனுப்புகிறார். சம்மனில் , இருவரும் கை எழுத்திட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தேவராஜ் மகள்
தேவராஜ் வருவார் என்று பார்த்தால் அவரின் மகன் வந்து இன்ஸ்பெக்டரை மிரட்டுகிறான்.அவர் தில்லாக உட்கார்ந்து பதில் பேச, போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் அத்தனை பேருக்கும் ஒரே சமயத்தில் போன் வருது. எடுத்து பேசினால், ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒருத்தரை காணலைன்னு அழறாங்க. எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு போயிடறாங்க. இன்ஸ்பெக்டர் திகைப்பில் இருக்கார்.

மகள் யாழினி
நாகப்பனுக்கு பதிலாக வந்த அவரின் மகள் யாழினி, ஒரு படி மேலே போய் இன்ஸ்பெக்டரையே மிரட்டுகிறாள். உங்க அம்மா இத்தனை மணிக்கு எழுந்திரிப்பாங்க, குளிப்பாங்க..கோயிலுக்கு போவாங்க...எத்தனை மணிக்கு என்னென்ன சாப்பிடுவாங்கன்னு சரியா சொல்றா. கடைசியா தினம் நாலரை மணிக்கு அம்மாவிடமிருந்து உங்களுக்கு கால் வரும். நாளைக்கு அது வராது பரவால்லியான்னு கேட்கறா. அங்கே வந்து மக்களிடம் விசாரிச்சு பாரு. அவர்களில் யாராவது என் அப்பாவை ரவுடின்னு சொல்லட்டும். அப்புறம் என் அப்பா போலீஸ் ஸ்டேஷன் வருவார்னு சொல்றா
இப்போதும் அதிர்ச்சியில் இருக்கார் இன்ஸ்பெக்டர்.


Click it and Unblock the Notifications











