புத்தாண்டு விஜய் டிவியில் பேட்டி அளிக்கும் RRR டீம்...தயாராகுங்கள் ரசிகர்களே
சென்னை : ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
Recommended Video
இதில் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டு, படம் குறித்து கலகலப்பாக பதிலளித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை டி.டி தொகுத்து வழங்குகிறார், இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஆர்.ஆர்.ஆர்.
பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.

400 கோடி செலவில்
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி உள்ள இப்படம் ஜனவரி 7ந்தேதி திரைக்கு வரவுள்ளது.

நியூ இயர் ஸ்பெஷல்
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் கூட்டாக விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். டிடி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜூனியர் என்.டி.ஆர் விஜய் குறித்து பல சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சி ஜனவரி 1ந் தேதி 2.30மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கோலாகலமாக
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி தெலுங்கு பிக் பாஸ் பைனாலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் புத்தாண்டு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முன் நயன்தாராவின் நெற்றிக்கண் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ புரொமோஷன்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











