ஸ்டார் ப்ளஸ் சேனலில் இன்று முதல் மகாபாரதம்: ரூ.100 கோடியில் தயாரான பிரம்மாண்டம்!

By Mayura Akilan

ஸ்டார் ப்ளஸ் சேனலில் இன்று இரவு 8.30 மணிமுதல் மகாபாரம் இதிகாசத் தொடர் ஒளிபரப்பாகிறது.

இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் காப்பியங்களை படிப்பதை விட கதை வடிவில் பார்ப்பதற்கு இன்றைய இளைஞர்களும், குழந்தைகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தூர்தர்சன் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மகாபாரதம் ஒளிபரப்பானது. பின்னர் தனியார் தொலைக்காட்சிகளில் புதிய வடிவில் ஒளிபரப்பானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழில் சன் டிவியில் ஞாயிறுதோறும் காலை நேரத்தில் மகாபாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்டார் பிளஸ் சேனலில் மிகப்பிரம்மாண்டமாக முற்றிலும் புதுமையான வகையில் மகாபாரதம் தொடர் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

100 கோடி பட்ஜெட்

100 கோடி பட்ஜெட்

பாலிவுட் உலகில் சினிமா தயாரிக்க ரூ. 100 கோடி தாரளமாக செலவு செய்வார்கள். இப்போது மகாபாரதம் இதிகாச தொடருக்காக 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.

விளம்பரப்படுத்த ரூ. 20 கோடி

விளம்பரப்படுத்த ரூ. 20 கோடி

இந்த தொடரை மக்களிடம் கொண்டு சேர்க்க மட்டும் 20 கோடி ருபாய் செலவு செய்துள்ளது ஸ்டார் ப்ளஸ் நிறுவனம். யு டுயூப்களில் புரமோ, இணையதளங்களில் விளம்பரம் என கடந்த ஒருமாத காலமாகவே மகாபாரதம் பற்றிய பேச்சுதான்,

மும்பை, டெல்லி

மும்பை, டெல்லி

இந்த தொடருக்காக நடிகர், நடிகையர்கள் அணிந்துள்ள நகைகள், பயன்படுத்தும் ஆயுதங்களை மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் ஷாப்பிங் மால்களில் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர்.

10 செகண்டுக்கு ரூ.2 லட்சம்

10 செகண்டுக்கு ரூ.2 லட்சம்

இந்த தொடரின் நடுவே ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்கு 10 செகண்டுக்கு ரூ.2 லட்சம் ரூபாயாம். இந்த தொடரில் பூஜா ஷர்மா என்ற நடிகை திரௌபதியாக நடித்துள்ளார். சௌரப் ஜெயின் என்பவர் கிருஷ்ணராகவும், ரோகித் பரத்வாஜ் யுதிஸ்ட்ராகவும், ஷகீர் சேக் அர்ஜூனனாவும் நடித்துள்ளார்.

செப்டம்பர் 16 முதல்

செப்டம்பர் 16 முதல்

மகாபாரதம் தொடர் இன்று முதல் ( செப்டம்பர் 16 ) தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 128 எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X