Run serial: ரன்... இது மாதவன் படம் இல்லை, சன் டிவி புது சீரியல்!
சென்னை: சன் டிவியின் ரன் என்று ஒரு புது சீரியல் ஆகஸ்டு ஐந்தாம் தேதியிலிருந்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். எந்த நேரத்தில் என்று இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. எந்த சீரியலை முடித்துவிட்டு இதை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு கூடி உள்ளது.
சீரியல்களுக்கு புகழ் பெற்ற சினிமா டைட்டில் பெயர்களை வைத்து சேனல்களில் ஒளிபரப்புவது என்பது இப்போதைய டிரெண்ட்.. கல்யாண பரிசு சீரியல் மூலம் டிரெண்டைத் துவக்கி வைத்ததும் சன் டிவிதான்.
இப்போது அனைத்து சேனல்களும் இதையே பின்பற்றி வரும் நிலையில் சன் டிவியும்இந்த டிரெண்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இப்போது புகழ்பெற்ற இயக்குநர் லிங்குசாமி, நடிகர் மாதவனை வைத்து எடுத்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ரன்.இதன் பெயரில் சன் டிவியில் வரப்போகுது புத்தம் புது சீரியல்.

ஸ்டார் காஸ்ட் நடிகர்
நடிகர் கிருஷ்ணா தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம், சின்னத்திரை ஸ்டார் காஸ்ட் நடிகராகி இருக்கிறார்.இவர் நடிக்கும் சீரியல்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று கணிக்கும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறார் கிருஷ்ணா. முதலில் கவிதாலயா சீரியல்களில் அறிமுகமாகி பிரபலம் ஆனவர் கிருஷ்ணா. என்றாலும், அதற்குப் பிறகு சின்னத் திரையில் வாய்ப்பு இல்லை.பெரிய திரையில் சில படங்களில் அவ்வப்போது தலைக்காட்டி வந்தார்.

தெய்வமகள் புகழ்
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்து இருந்தார். இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இருவரையும் மக்கள் பல நிகழ்ச்சிகளில் நேராகப் பார்த்தும் மகிழ்ந்தார்கள்.. ஆனால், தெய்வமகள் சீரியல் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும்,கிருஷ்ணா எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.

படத்தில் சேர்ந்த காதல்
ஆனந்த புரத்து வீடு என்கிற படத்தில் நடிகை சாயா சிங்குடன் கிருஷ்ணா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்து, திருமணமும் செய்துகொண்டு நல்ல தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்தான் இப்போது சன் டிவியின் புத்தம் புது சீரியலான ரன் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜ்கபூர் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

அரைத்த மாவையே
சன் டிவியில் ஒரே கான்செப்டில் இருப்பது போல சில சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இப்படிப்பட்ட சீரியல்களை தயவு தாட்சண்யம் இன்றி நிறுத்தி விடுவது நல்லது. எந்தெந்த சீரியல்கள் ஒரே கான்செப்டில் உள்ளன என்பதை கண்டிப்பாக சுட்டிக்காட்டுவோம். இது போன்ற புது சீரியல்களுக்கு வரவேற்பு கொடுப்போம்.


Click it and Unblock the Notifications











